புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மே, 2016

முன்னாள் போராளிகளினது கைது தொடர்பான விமர்சனங்களை ஏற்க முடியாது-ராஜித சேனாரட்ன

விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் கைது செய்யப்படுவது தொடர்பிலான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளமுடியாது
என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன், யுத்தக்குற்றம் தொடர்பிலான உள்ளகவிசாரணை பொறிமுறை உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 29ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விஷேட பிரதிநிதிகள் இலங்கையின் தற்போதைய நிலை குறித்த கருத்துகளை  வெளியிட்டிருந்தனர்.
இது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்திருந்த அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யுத்த குற்றச்சாட்டு தொடர்பிலான வாய்மூல அறிக்கை ஜூன் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இவ்வறிக்கையானது, சர்வதேசத்தினை திருப்திப்படுத்தும் வகையில் அமையும். இனப் பிரச்சினைக்கான தீர்வுகளை இந்த ஆண்டின் இறுதிக்குள் வழங்கும் வகையிலான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
இதேவேளை, விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் கைது செய்யப்படுவது மற்றும் பாதுகாப்பு விடயம் தொடர்பிலான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad