புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மே, 2016

எம்.பி. ஆகிறார் ப.சிதம்பரம்

இந்தியா முழுவதும் பதவி முடியும் டெல்லி மேல்–சபை உறுப்பினர்களுக்கு பதில் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு ஜூன் 11–ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 57 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

அதன்படி மேல்–சபை தேர்தலில் போட்டியிட உள்ள காங்கிரஸ் வேட்பாளர்கள் பெயர் விவரங்கள் வெளியாகி உள்ளது. முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் மராட்டிய மாநிலத்தில் போட்டியிடுகிறார். இவர் 2014–ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. அவருக்கு பதில் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அதேபோல மூத்த தலைவர் கபில்சிபல் உத்தரபிரதேச மாநிலத்திலும், ஜெய்ராம் ரமேஷ், ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோர் கர்நாடக மாநிலத்திலும் போட்டியிடுகிறார்கள். காங்கிரஸ் பொதுச் செயலாளர் அம்பிகா சோனி பஞ்சாப் மாநிலத்திலும், சாயா வர்மா சத்தீஸ்கார் மாநிலத்திலும், விவேக் தாங்கா மத்திய பிரதேசத்திலும், பிரதீப் தாம்தா உத்தரகாண்டிலும் போட்டியிடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் 6 இடங்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் அ.தி.மு.க. 4 இடங்களுக்கும், தி.மு.க. 2 இடங்களுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனால் போட்டி இன்றி அவர்கள் 6 பேரும் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது.

ad

ad