புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மே, 2016

வைகோ மீதான தாக்குதல் முயற்சிக்கு தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணி கண்டனம்

தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமாகா அணி வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,
’’தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணிக்கு மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அதிமுக, திமுக மீது அதிருப்தியுற்ற மக்கள் மாற்று அரசியல், கொள்கைகளுக்கு ஆதரவாக அணி திரளும் நிலை உள்ளது. இதனால் ஆத்திரம் கொண்டு திமுக, அதிமுகவினர் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணியினர் மீது தாக்குதல் தொடுத்து வருகின்றனர்.

ஏப்ரல் 3 அன்று சேலத்தில் பிரேமலதா விஜயகாந்த் தங்கியிருந்த ஓட்டலுக்குள் புகுந்து அதிமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டனர்.  ஏப்ரல் 21 அன்று சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தின் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.  கோவில்பட்டியில் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான வைகோ அவர்களுக்கு எதிராக சாதி கலவரத்தை தூண்டிவிட முயற்சித்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று (30.4.2016) திருவாரூர் தொகுதியில் பிரச்சாரத்திற்கு செல்லும் வழியில், திருவாரூர் நகரில்  வைகோ  மீது தாக்குதல் நடத்த திமுகவினர் முனைந்துள்ளனர்.  அவரது வாகனத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர். திருவாரூர் நகர எல்லையான நாலுகால் மண்டபம் அருகே திமுகவினர் கருப்புக் கொடி காட்டி தடி மற்றும் இரும்புக் கம்பிகளால் வைகோ சென்ற வாகனத்தின் மீது கொலைவெறி நோக்கோடு தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வந்த வாகனங்களையும் தடிகொண்டு தாக்கியுள்ளனர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர்கள் சின்னையா என்ற செல்லத்துரை, முகமது ஈசாக், மதிமுகவைச் சேர்ந்த மகேஷ் ஆகியோர் காயமடைந்துள்ளனர். திமுகவின் இத்தகைய வன்முறைத் தாக்குதலை தேமுதிக, மதிமுக, சிபிஐ (எம்), சிபிஐ, வி.சி.க., தமாகா ஆகிய கட்சிகள் வன்மையாக கண்டிக்கின்றன. 

தொடர்ச்சியாக தாக்குதல் தொடுத்து வரும் திமுக, அதிமுக வன்முறையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென தமிழக அரசையும், காவல்துறையையும் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணி வலியுறுத்துகிறது.

தேர்தல் தோல்வி பயத்தால் அச்சமுற்று தேர்தலை சீர்குலைக்க, கலவரச் சூழலை ஏற்படுத்த திட்டமிட்டு செயலாற்றும் திமுக, அதிமுக மீது தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியும், தேர்தல் ஆணையமும் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்றும், அமைதியாக தேர்தல் நடைபெற அனைத்து பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை உறுதி செய்திட வேண்டுமெனவும் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணி வலியுறுத்துகிறது’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad