புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மே, 2016

ஜெ. பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பி.சுசீலா, வாணி ஜெயராம்: விஷால், நாசரும் ஆஜர்!

தமிழக முதல்வராக 6வது முறையாக பதவியேற்றிருக்கிறார் ஜெயலலிதா. பெரும் எதிர்பார்ப்புக்கிடையே நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாது சினிமா பிரபலங்களும் பங்கேற்றனர். பிரபல பின்னணி பாடகிகளான பி.சுசீலா, வாணி ஜெயராம், எம்.என்.ராஜம் ஆகியோரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பொன். ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன்,மதுரை ஆதினம், தொழிலதிபர் ஏ.சி.முத்தையா, ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வெங்கடாசலம்பிரபல பின்னணி பாடகிகளான பி.சுசீலா, வாணி ஜெயராம், எம்.என்.ராஜம்  2016 சட்டசபைத் தேர்தலில் அதிக இடங்களைப் பிடித்த அதிமுக, தமிழகத்தில் 32 ஆண்டுகளுக்குப் பின் தொடர்ச்சியாக 2 வது முறையாக ஆட்சி அமைத்தது. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்த விழாவில் முதல்வர் மற்றும் 28 அமைச்சர்கள் பதவியேற்றனர். இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக போயஸ் கார்டனிலிருந்து ஜெயலலிதா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்குக்கு வரும்போது சாலையின் இரு புறங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.


ad

ad