புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2016

களனி கங்கையின் திடீர் கோரத்தாண்டவத்தால் மூழ்கியது கொழும்பு

களனி கங்கையின் திடீர் கோரத்தாண்டவத்தால் மூழ்கியது கொழும்புநேற்று பெய்த மழையினால் கொழும்பின் பல
பிரதான பகுதிகள் நீரில் மூழ்கின. இன்றும் அதே நிலைமை நீடிப்பதுடன் களனி கங்கையின் நீர் மட்டம் திடீரென அதிகரித்ததால் குறித்த பகுதியில் உள்ள மக்களின் நிலைமை மேசமாகியுள்ளது.
களனி கங்கையை அண்மித்த பகுதிகளில் வெள்ளம் ஏற்படக் கூடிய சத்தியம் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து சுமார் 3 இலட்சம் வரையான மக்கள் இடம்பெயர்ந்து வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
எனினும் சில மக்கள் இன்று வெள்ளநீர் வராது என்ற எண்ணப்பாட்டில் மாடி வீடுகளில் தங்கியிருந்தனர். நேற்றைய தினம் இரண்டு அடி மூன்று அடியில் இருந்த வெள்ள நீர் தற்போது பல மடங்குகள் திடீரென அதிகரித்துள்ளதால் அவர்கள் பெரும் சிரமத்திற்கு முகம்கொடுத்து உள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் பலதுறைகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வெள்ளம்பிட்டி - அவிஸ்ஸாவலை பாதை மூடப்பட்டது
வெள்ளம்பிட்டியிலிருந்து அவிஸ்ஸாவலை செல்லும் பாதை முற்றாக மூடப்பட்டுள்ளது. இதனால் கொழும்பில் பாரிய வாகன நெரிசல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீரின் மட்டம் அதிகரித்துச் செல்வதால் கொழும்பின் பல பகுதிகள் நிரில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக

ad

ad