வெள்ளி, மே 06, 2016

தேர்தல் முடிவுகள்: ஸ்காட்லாந்தில் தொழிற்கட்சிக்கு பின்னடைவு

பிரிட்டனில் நடந்து முடிந்துள்ள தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.

ஸ்காட்லாந்தில் பெரும் செல்வாக்கு நிறைந்த கட்சியாக பார்க்கப்பட்ட தொழிற்கட்சி, தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
வேல்ஸ் சட்டசபைக்கான தேர்தலில் முன்னணியில் இருந்தாலும், பெரும்பான்மை பலத்தை பெற தவறவிட்டுள்ளது.
மேலும் லண்டன் மேயருக்கான தேர்தலில் தொழிற்கட்சியின் ஷாதிக் கான் முன்னணியில் உள்ளார்.