புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2016

ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த், ரஜினி, கமல் உள்பட பிரபலங்கள் வாக்களிப்பு


முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகர்கள் ரஜினிகாந்த்,
அஜித்குமார் ஆகியோர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

234 சட்டசபை தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு இன்று, அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய இரு தொகுதிகளை தவிர ஏனைய 232 தொகுதிகளுக்கும் இன்று  காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. மாலை 6 மணி வரை இந்த வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு  வாக்குப்பதிவு துவங்கியதும், மக்கள் ஆர்வமுடன் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 

திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரம் சாரதா நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். வாக்களித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கருணாநிதி, தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார். 

விருகம்பாக்கம் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில்  பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தர ராஜன் வாக்குப்பதிவு செய்தார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கை ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்குசாவடியில் பதிவு செய்தார். அப்போது, பத்திரிகையாளர், போட்டோ கிராபர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நடிகர் கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். நடிகை கவுதமியும் தனது வாக்கை பதிவு செய்தார்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் காலை 8.33 மணிக்கு தனது வாக்கை பதிவு செய்தார். அவரது மனைவி துர்கா, மகன் உதயநிதி, மருமகள் ஆகியோரும் வாக்களித்தனர்.

திருவான்மியூரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் நடிகர் அஜித், அவரது மனைவி ஷாலினி ஆகியோர் தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.
அரும்பாக்கத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தனது வாக்கை பதிவு செய்தார்.  பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராஜேஷ் லக்கானி, வாக்குப்பதிவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். மேலும், 2 மணி நேரத்திற்கு ஒரு முறை வாக்குப்பதிவு நிலவரங்கள் தெரிவிக்கப்படும் என்றார்.
சென்னை சாலிகிராமத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் காலை 9.40 மணிக்கு தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.
சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் முதல்வர் ஜெயலலிதா வாக்களித்தார். அவரது தாேழி சசிகலாவும் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, இரண்டு நாட்கள் பொறுத்திருந்தால் மக்கள் தீர்ப்பு என்னவென்று தெரியும் என்றார்.
 

சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் தனது வாக்கை பதிவு செய்தார்.
சென்னை மயிலாப்பூரில் வாக்களித்த கனிமொழி கூறுகையில், ஆளும்கட்சிக்கு எதிராக பெரிய அலை வீசுகிறது என்றார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குன்னம் சட்டமன்ற தொகுதியில் வாக்களித்தார். அவருடன் வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸூம் வாக்களித்தார்.
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஈரோட்டில் தனது வாக்கை பதிவு செய்தார்.

சென்னை ஆதம்பாக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தனது வாக்கை பதிவு செய்தார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை சாலிகிராமத்தில் உள்ள சமாஜம் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

ad

ad