புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மே, 2016

கருத்துக்கணிப்புகளை தடை செய்ய வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

தேர்தல் கருத்துக்கணிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அக் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பாக ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் மே 16-ஆம் தேதி வரையிலான காலத்தை கருத்துக்கணிப்புகளை நடத்தவோ அல்லது அதை ஊடங்கள் மூலமாக வெளியிடவோ தடைசெய்யப்பட வேண்டிய கால அளவாக அறிவித்துள்ளது.

ஆனால், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை மீறி வாக்காளர்களிடம் கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்து திணிப்பு நடைபெற்று வருகிறது. சில ஊடகங்கள் இந்த கருத்துக் கணிப்புகளை வெளியிட்டும் வருகின்றன.

தேர்தல் நடத்தை விதி மீறல் குறித்து சார்பற்ற நடுநிலையோடு செயல்பட வேண்டிய தமிழக தலைமை தேர்தல் அலுவலகம் அமைதி காத்து வருவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

இது வாக்காளர்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும் வாக்களிக்கும் வாய்ப்புகளைத் தடுப்பதாகும். எனவே இது போன்ற கருத்துக்கணிப்புகளை தேர்தல் ஆணையம் உடனடியாகத் தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.கருத்துக்கணிப்புகளை தடை செய்ய வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

ad

ad