புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மே, 2016

பயங்கரவாத தடைச்சட்டம்: ஐ.நா நிபுணர் ஸ்ரீலங்கா மீது காட்டம்

JuanMendez_fileபயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குவதாக எந்தவித வாக்குறுதியையும் ஸ்ரீலங்கா அரசாங்கம் வழங்கவில்லை என்று சித்திரவதைகள்
தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் (Juan mendez) ஜுவான் மென்டேஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா அரசாங்கம் இவ்வாறான உறுதிமொழியை வழங்கியிருப்பதாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா – வொஷிங்டனில் தனியார் ஊடகமொன்றுக்கு இன்று வெள்ளிக்கிழமை வழங்கிய செவ்வியின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
சித்திரவதைகள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் (Juan mendez) ஜுவான் மென்டேஸ் மற்றும் நீதிமன்ற சுயாதீனத்துவம் தொடர்பான ஐ.நா சிறப்பு நிபுணர் (Monica Pinto) மொனிகா பின்டோ ஆகியோர் அண்மையில் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இந்த விஜயம் தொடர்பாக இந்த செவ்வியின்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஜுவான் மென்டேஸ் பதில் வழங்கியுள்ளார்.
ஸ்ரீலங்காவில் நடைமுறையிலிருக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பாக அந்நாட்டிலுள்ள உயர்மட்ட அதிகாரிகள் மிகவும் கவனமாக உள்ளனர்.
எனினும் இந்தச் சட்டத்தை நீக்குவதற்கோ, திருத்தம் செய்வது தொடர்பிலோ எப்படியான செயன்முறை பின்பற்றவது குறித்து எந்தவித எதிர்ப்பார்ப்பையும் ஸ்ரீலங்கா அரசாங்கம் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஸ்ரீலங்காவின் நீதித்துறை குறித்தும் ஜுவான் மென்டேஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.
விசேடமாக பொலிஸ் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம் உட்பட நீதிமன்றம் ஆகிய பிரதான கட்டமைப்புக்களை மக்களுக்கு அதிகபட்ச நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்காக மாற்றத்திற்கு உட்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் ஸ்ரீலங்காவில் பொலிஸாரும், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரும் சந்தேக நபர்களை சித்திரவதைகளுக்கு உட்படுத்திவருவதாக ஜுவான் மென்டேஸ் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஸ்ரீலங்கா அரச தலைவர்களுடனான சந்திப்பின்போது ஸ்ரீலங்காவின் நீதிக்கட்டமைப்பு தொடர்பாக பாராட்டு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad