புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மே, 2016

ராமதாஸுக்கு எதிராகத் திரும்பிய சாதி கூட்டமைப்பு! -'வில்லங்க' வியூகம்

அரசியல் லாபத்திற்காக நம்மைப் பயன்படுத்திய ராமதாஸுக்கு நாம் யார் என்பதைக் காட்ட வேண்டும். வடபுலத்தில் நமது
ஒரு ஓட்டுகூட பா.ம.கவுக்குப் போய்விடக் கூடாது' என அதிரடியாக முடிவெடுத்துள்ளனர் பிற்படுத்தப்பட்டோர் சமூகக் கூட்டமைப்பினர். 

தர்மபுரி, நாயக்கன்கொட்டாயில் இளவரசன், திவ்யா காதல் திருமணத்தையொட்டி எழுந்த சண்டை, பெரும் கலவரமாக மூண்டது. ஏராளமான தலித் குடியிருப்புகள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த சம்பவத்திற்குப் பிறகு 'நாடகக் காதலை எதிர்க்கிறோம்' என்ற ஒற்றைச் சொல்லை வைத்துக் கொண்டு, சாதிக் கூட்டமைப்பை ஏற்படுத்தினார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ்.
பிராமணர் உள்பட அனைத்து பிற்படுத்தப்பட்டோர் சமூகங்களையும் இணைத்து, புதிய சாதிக் கூட்டமைப்பை உருவாக்கினார். மாமல்லபுரத்தில் நடந்த பா.ம.க பொதுக்கூட்டத்தில், கூட்டமைப்பின் நிர்வாகிகளை மேடை ஏற்றினார்.
இந்நிலையில், "அன்புமணி முதல்வராவதற்கு நாம் ஆதரவு கொடுத்துள்ளோம் என்கிறார் ராமதாஸ். நாம் அப்படி எந்த ஆதரவையும் கொடுக்கவில்லை. நம்மைப் பயன்படுத்தி அரசியல் லாபம் அடையத் துடிக்கிறார் ராமதாஸ். வடபுலத்தில் அனைத்து தொகுதிகளிலும் பா.ம.கவை தோற்கடிக்க வேண்டும்" என சாதிக் கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர். 

சென்னை, ரிச்சி தெருவில் உள்ள தனியார் கடை ஒன்றில் நேற்று முன்தினம் முதலியார், உடையார், கவர நாயுடு, கிராமணி, வெள்ளாளர் உள்பட அனைத்து பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகள் திரண்டனர்.
கிருஷ்ணகாந்த், அன்பாளன் உள்ளிட்ட சாதி சங்க நிர்வாகிகள் கூட்டத்தை வழிநடத்தினர். இதுகுறித்து நம்மிடம் பேசிய சாதி கூட்டமைப்பின் நிர்வாகி ஒருவர், " கலப்பு திருமணத்திற்கு எதிராகப் பேசியதால்தான் ராமதாஸ் பின்னால் திரண்டோம். எங்களின் பலத்தை தன்னுடைய பலமாக அவர் அறிவித்துக் கொண்டார். நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க அணியில் எட்டு தொகுதிகளை வாங்கியது பா.ம.க. அதில், ஆறு பொதுத் தொகுதிகளில் அவர்கள் போட்டியிட்டாலும், ஒரு இடத்தைக்கூட எங்கள் கூட்டமைப்பினருக்குக் கொடுக்கவில்லை.
 

இதைப் பற்றிக் கேட்டபோது, 'நெருக்கடியோடுதான் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கிறோம். சட்டமன்றத் தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம்' என சமாதானப்படுத்தினார். தேர்தல் பிரசாரத்திற்கும் எங்களைப் பயன்படுத்திக் கொண்டார். இப்போது சட்டமன்றத் தேர்தலில் தர்மபுரியில் 5 தொகுதிகளிலும் வன்னியர்கள்தான் நிற்கின்றனர். சிதம்பரத்திலும் அவர்கள் சமூகத்தினர்தான் களமிறங்கியுள்ளனர். எங்களை எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
'2011 தேர்தலில் பா.ம.கவும் விடுதலைச் சிறுத்தைகளும் கூட்டணி வைத்து நம்மை ஏமாற்றினார்கள். இந்தமுறை தலித் மக்களுக்கு எதிரானவர்களாகக் காட்டிக் கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறார் ராமதாஸ். தலித் தவிர அனைத்து சமுதாயக் கூட்டமைப்பு என நம்மையும் சேர்த்து அறிவித்துவிட்டு, களத்தில் நம்மை முன்னிறுத்துதையே தவிர்க்கிறார். நமது ஓட்டு மட்டும்தான் அவருக்குப் பலம். இந்தமுறை அதற்கு இடம் கொடுத்துவிடக் கூடாது. 

அன்புமணி வெற்றிக்காக பாடுபட்ட நம்மை ஒரு பொருட்டாகே பா.ம.க எடுத்துக் கொள்ளவில்லை. எனவே, இந்தத் தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள கட்சிக்கு உங்கள் மனசாட்சிப்படி ஓட்டுப் போடுங்கள். வடமாவட்டங்களில் பா.ம.கவின் பலம்வாய்ந்த தொகுதிகளான தர்மபுரி, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, ஜெயங்கொண்டம், குன்னம் உள்ளிட்ட தொகுதிகளில், நமது மக்களின் ஒரு ஓட்டுகூட மாம்பழத்திற்கு விழுந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்போம். இதை நமது சமூகத்து மக்களிடம் விளக்கிச் சொல்லுங்கள் என அறிவுறுத்தியிருக்கிறோம்' என்றார் விரிவாக. 

ராமதாஸ் தூக்கிப் பிடித்த சாதி ஆயுதம், மாம்பழத்தையே அறுக்கும் என அவர் நினைத்துப் பார்த்திருப்பாரா என்ன? 

ad

ad