புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2016

மண்சரிவு ஏற்பட்ட அரநாயக்கவிற்கு சென்ற ஜனாதிபதி பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்

சீரற்ற காலநிலையினால் கேகாலை, அரநாயக்க பகுதியில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, நேரடியாகச்
சென்று பார்வையிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு பாதுகாப்பு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (புதன்கிழமை) குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு, அங்கிருந்த பாதுகாப்பு பிரிவினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன், மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதன்போது, பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினருக்கு பணித்துள்ளார்.
அத்துடன், மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதிக்கப்பட்ட மக்களின் குறைப்பாடுகள் குறித்து கேட்டறிந்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்துக் கொடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

ad

ad