வெள்ளி, மே 06, 2016

சென்னை வந்த சோனியாகாந்திக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் திமுக தலைவர் கலைஞரும் சென்னை தீவுத் திடலில் இன்று மாலை பொதுக்கூட்டத்தில் பிரச்சாரத்தில் உரையாற்றினர்.

அதற்காக சோனியா காந்தி விமானம் மூலம் இன்று மாலை 3 மணியளவில் சென்னை வந்தடைந்தார். சோனியா காந்தியின் வருகையை கண்டித்து தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் சிலர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மெரீனா கடற்கரை சாலையில் உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், இயக்குநர் கவுதமன் தலைமையில் மாணவர்கள் பவர் கலந்து கொண்டனர். 

இலங்கை தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டினை கண்டித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.