புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மே, 2016

தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா. அணி தொடரும் : திருமாவளவன் நம்பிக்கை


விடுதலை சிறுத்தைகள் போட்டியிட்ட 25 தொகுதிகளை சேர்ந்த வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், தேர்தல் பணி பொறுப்பாளர்கள்
பங்கேற்ற மீளாய்வு கூட்டம் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னையில் இன்று நடந்தது.

இந்த கூட்டத்தின் போது நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:-

நடந்து முடிந்த தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை. அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் அனைத்து வகை அத்து மீறல்களும் செய்தன. ஒட்டு மொத்த வாக்காளர்கள் மீதும் ஊழல் கரையை பூசி விட்டனர். வருங்காலத்திலாவது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் உறுதி ஏற்க வேண்டும். தேர்தல் ஆணையம் புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும். அதாவது வேட்பாளர்கள் யாரும் செலவு செய்யக்கூடாது. இந்திய தேர்தல் ஆணையமே வேட்பாளர்களின் செலவை ஏற்க வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் பிரசாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். வீதி வீதியாக செல்லவோ, வீடு வீடாக செல்லவோ அனுமதிக்க கூடாது. கிராமப்புறங்களில் வீட்டின் சுவர்களில் சின்னம் வரைய அனுமதிக்க கூடாது.

இத்தகைய நடைமுறைகள் மூலம் ஊதாரி செலவுகளை கட்டுப்படுத்த முடியும். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதையும் தடுக்க முடியும். தேர்தல் முறையில் இந்த சீர்திருத்தங்களை கொண்டு வந்தால்தான் ஊழல் நடவடிக்கைகளை தடுக்க முடியும். தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா. அணி தொடர வேண்டும் என்பது தான் விடுதலை சிறுத்தையின் விருப்பமாகும். இந்த தோல்வி ஒரு தற்காலிக பின்னடைவுதான். எனவே தொடர்ந்து மாற்று அரசியலை முன்னெடுப்போம். தமிழக அமைச்சரவையில் தலித்துகளுக்கு 6 பேருக்காவது இடம் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ad

ad