புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மே, 2016

தீயை அணைக்கும் பணியில் தந்தை. அக்கினிசுவாலை சூழ்ந்த நெடுஞ்சாலை விபத்தில் மகள் மரணம்.

கனடா-காட்டுத்தீயினால் வோர்ட் மக்முரெயை விட்டு வெளியேறிய போது அக்கினிசூழை மூடிய நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில்
துணை தீயணைணப்பு அதிகாரியின் மகள் கொல்லப்பட்டார்.
அல்பேர்ட்டாவின் வடக்கு பகுதியில் வசிப்பவர்கள் கட்டாயமாக வெளியேற வேண்டும் என கட்டளையிடப்பட்டது. இதனால் அவ்விடத்தை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்களில் எமிலி றயன் என்பவரும் ஒருவர்.
றயன் 9-ம் வகுப்பு மாணவி என உறுதிப் படுத்தப்பட்டது.மூவர்களில் ஒருவரான றயன் விபத்து நடந்த இடத்திலேயே இறந்து விட்டார்.மாணவர்களிடையே மிகவும் துடிப்பான ஈடுபாடுடைய ஒருவர் என இவரது பாடசாலை அதிபர் தெரிவித்தார்.
றயனும் 19-வயதுடைய இவரது உடன்பிறவா சகோதரி அரன் ஹொட்சனும் எஸ்யுவி வாகனத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கையில் விபத்து நடந்தது.
நெடுஞ்சாலை ஒன்றிற்கு அருகாமையில் தீ எரிந்து கொண்டிருந்ததால் வாகனம் டிரக் ஒன்றுடன் மோதியுள்ளது.
இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்
எமிலியின் தந்தை கிரான்லி றயன் தீக்கனலுடன் போராடிக்கொண்டிருந்த நேரத்தில் விபத்து நடந்துள்ளது. துக்கத்தில் இருக்கும் குடும்பத்தினருடன் இணைந்து கொள்வதற்காக பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
ryan

ad

ad