புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மே, 2016

கனடா புங்குடுதீவு பழையமாணவர் சங்கம்,சுவிஸ் சுரேஷ் ஆதரவில் வைத்தியசாலை புனரமைப்பு

அனைத்து தாய்மண் உறவுகளுக்கும் எம்பணிவான வணக்கங்கள்!
கனடா புங்குடுதீவு பழையமாணவர் சங்கம் வழங்கிய
இலங்கைநாணயம் 165000 ரூபாவும் புங்குடுதீவு 11ம் வட்டாரம் ஆலடிச்சந்தியைச் சேர்ந்த
அமரர் கனகசபை
செல்வரெத்தினம் ( அதிபர் )
ஞாபகார்த்தமாக
சுவிஸ் சுரேஷ் அவர்களால் வழங்கப்பட்ட இலங்கை நாணயம் 50000 ரூபா விலும் புங்குடுதீவு உலக மையம் தனது வேலைவாய்ப்புப்துறையுடாக புங்குடுதீவு பிரதேச வைத்திய சாலை அனைத்து பிரிவுகளுக்கும் வர்ணம் பூசியதுடன் நோயாளர் விடுதிக்கான உபகரணங்கள்,வைத்தியருக்கான இருக்கை, என்பன போன்ற தேவைகள் நிறைவேற்றிக்கொடுக்கப்பட்டுள்ளது. எமது வேலை நிலுவையாக நோயளர் விடுதி மற்றும் அறைகளுக்கான திரைகள் (கேட்டீன்ஸ்) வழங்கல் மட்டுமே உண்டு.

என்னுமொரு மகிழ்ச்சியான செய்தி புங்குடுதீவு உலக மையத்தினர் வைத்தியசாலை பற்றிய ஓளிப்படங்கள், செய்திகள் இணையங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சென்றதையடுத்து எமது வைத்தியசாலைக்கு வைத்தியசாலை நிர்வாகம் இலங்கை நாணயம் 3000000 ஓதுக்கியுள்ளதாகவும் நாம் மேற்கொள்ள இருந்த பல வேலைத்திட்டங்களை நிர்வாகமே மேற்கொள்வாதாக உறுதி அளித்துள்ளதாகவும் வைத்தியர் மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்தார் உறவுகளே! ஆகவே எமது உறவுகள் அனைவரும் எங்கள் உயரிய நோக்கம் அறிந்து உதவியமைக்கும் எம்முடன் இருந்து எம்மை வலுப்படுத்திவருவதற்கும் எமது நன்றிகள் எம் அன்பான தாய்மண்உறவுகளே!
வாக்குறுதி அளித்தல் என்பது சொல் அல்ல செயற்பாடே"
இவ்வண்ணம்
வேலைவாய்ப்பு மற்றும் சமுகநலத்துறை/
ஊடகம் மற்றும் நிதித்துறை
புங்குடுதீவு உலக மையம்
14.05.2016
Like
Comment

ad

ad