புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மே, 2016

சிவ-சந்திரபாலன் புங்குடுதீவு சுவிட்சர்லாந்து's photo.
திரை முகத்திரையில் நமது கலைஞர்!
......................................................................
*K.s.ராஜா அல்ல, இவர் A.s.ராஜா!*
உங்களுடைய நினைவலைகளை முப்ப‌த்தெட்டு அல்ல‌தி நாப்ப‌து ஆண்டுக‌ளுக்கு முன்னோக்கிப் பாருங்கள்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலே மதுரக்குரலோன் k.s.ராஜா அவர்களின் குரலைக் கேட்டு மகிழ்ந்திருப்பீர்கள்.
அந்தக் குரலை பின்பற்றி பல அறிவிப்பாளர்கள் முயன்ற போதும் பயனளிக்கவில்லை. ஆனால், அது ஒருவருக்கு மட்டும் பயனளித்தது.
"அவர்தான் ஐரோப்பிய வானலைகளை அதிர வைத்துக் கொண்டிருக்கும் A.s.ராஜா."
அம‌ர‌த்துவ‌ம் அடைந்த‌ k.s.ராஜா அவ‌ர்க‌ளின் புக‌ளை உல‌கெங்கும் ப‌ர‌ப்பிக் கொண்டிருக்கும் A.s.ராஜா. த‌ன‌து ஆழுமையையும் வெளிப்ப‌டுத்தி வ‌ருகின்றார்.
காலை 9.00க்கு ஆர‌ம்ப‌மாகும் அவ‌ர‌து காலைப் பூந்தென்ற‌ல் நிக‌ழ்ச்சி மூலம்; அவர் ப‌ல‌ர‌து இல்ல‌ங்க‌ளுக்குச் சென்று, ப‌ல‌ர‌து உள்ள‌ங்க‌ளை கொள்ளை கொள்வ‌தை அறிய‌ முடிகிற‌து.
காலைக் க‌திர‌வ‌னுக்காக‌ காத்திருக்கும் ம‌ல‌ர்க‌ளைப்போலே, காலைப் பூந்தென்ற‌ல் நிக‌ழ்ச்சி மூல‌ம் இவ‌ர‌து குர‌லைக் கேட்க‌க் காத்திருக்கின்ற‌ன‌ர் நேய‌ர்க‌ள் கூட்ட‌ம்!
இந்த‌ நிக‌ழ்ச்சி மூல‌ம் நேய‌ர்க‌ளுட‌ன் அவ‌ர் உரையாடும் வித‌ம் சுவார‌ஸ்ய‌மான‌து. சினிமாச் செய்திக‌ளை விர‌ல் நுணியில் வைத்திருந்து விபரமாகச் சொல்லுகின்ற திறமை கொண்டவர்.
அது ம‌ட்டும‌ல்ல, அவ‌ர் த‌யாரித்து வ‌ழ‌ங்குகின்ற‌ நிக‌ழ்ச்சிக‌ள் அத்த‌னையும் மிக‌வும் ஆரோக்கிய‌மான‌வை. இவ‌ர் தொகுத்து வ‌ழ‌ங்குகின்ற‌ தொலைபேசி நிக‌ழ்ச்சிக‌ளுக்கு இணைப்பெடுப்ப‌து என்ப‌து மிக‌வும் சிர‌ம‌மான‌து.
குறிப்பாக‌ ப‌ல‌ வ‌ர்த்த‌க‌ நிறுவ‌ன‌த்தின‌ர்; த‌ங்க‌ள் நிறுவ‌ன‌ங்க‌ளின் விள‌ம்ப‌ர‌ங்க‌ளை இவ‌ருடைய‌ குர‌லில் வ‌ருவ‌தையே விரும்புகின்றனர்.
1997 தைப்பொங்க‌ல் திருநாளில் அறிவுப்பாள‌ராக T.r.t வானொலியூடாக ஒலிக்கத் தொட‌ங்கிய‌ இவ‌ர‌து குர‌ல். ப‌த்தொன்ப‌து ஆண்டுக‌ளையும் தாண்டி ஒலித்துக் கொண்டிருக்கிற‌து.
அண்மையில் பாரிசில் இடம் பெற்ற ஒரு நூல்வெளியீட்டு விழாவில், அவரின் சேவையை பாராட்டி "அறிவிப்புத்திலகம்" என்னும் பட்டமளித்து கௌரவித்தார்கள்.
அறிவிப்புத் துறையில், A.s.ராஜா அவர்களின் குரல் தொடர்ந்தும் ஒலித்துக் கொண்டிருக்க வாழ்த்துகின்றோம்!
பதிவு செய்தவர்
கலைஞானன்
25/05/2016
Like
Like
Love
Haha
Wow
Sad
Angry
Comm
Like
Comment

ad

ad