புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூன், 2016

ஜெயலலிதா உத்தரவுப்படி இசையமைப்பாளர் கோவர்தனத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது


முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, ரூ.10 லட்சம் டெபாசிட் தொகைக்கான ரசீதை இசையமைப்பாளர் கோவர்தனமிடம் நேற்று அ.தி.மு.க. நிர்வாகிகள் வழங்கினார்கள்.
அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–
ஜெயலலிதா ஆணைஅ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான
ஜெயலலிதா, இசையமைப்பாளர் கோவர்தனத்தின் வறுமை சூழ்நிலையை அறிந்து, அவருக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க ஆணையிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து 12–6–2016 (நேற்று) அன்று அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும், சேலம் புறநகர் மாவட்ட செயலாளரும், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, அமைப்புச் செயலாளர் செ.செம்மலை எம்.எல்.ஏ., சேலம் மாநகராட்சி மேயர் எஸ்.சவுண்டப்பன், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர், சேலம் மாநகர் மாவட்டம், 45–வது வட்டத்தில் வசித்து வரும் இசையமைப்பாளர் கோவர்தனத்தின் இல்லத்திற்கு நேரில் சென்று, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா சார்பாக, ‘‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை’’யில் இருந்து கோவர்தனம் பெயரில் 10 லட்சம் ரூபாயை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் நிலை வைப்பாக செலுத்தியதற்கான ரசீதையும், இம்மாத செலவிற்கு 10 ஆயிரம் ரூபாயையும் வழங்கி ஆறுதல் கூறினார்கள்.
ஜெயலலிதாவுக்கு நன்றிஇந்த நிலை வைப்பின் மூலம் கோவர்தனத்துக்கு மாதா மாதம் 8,125 ரூபாய் வட்டியாகக் கிடைக்கும். இந்நிகழ்வின் போது, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் உடன் இருந்தனர்.
தன்னுடைய குடும்பத்தின் வறுமைச் சூழ்நிலையை அறிந்து நிதியுதவி வழங்கிய, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதாவுக்கு, நிதியுதவியினைப் பெற்றுக்கொண்ட கோவர்தனம் தனது குடும்பத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

ad

ad