புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூன், 2016

சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபரை வெட்டி; வீட்டில் 150 பவுன் நகை ரூ.2.5 லட்சம் கொள்ளை


திருவான்மியூர் மகாலட்சுமி அவென்யூ எம்.ஜி.ராமச்சந்திரன் சாலையை சேர்ந்தவர் மதியரசு.  ரியல் எஸ்டேட் அதிபரான இவர்
பைனான்ஸ் தொழிலி லும் ஈடுபட்டு வருகிறார். 3 இடங்களில் டாஸ்மாக் மதுபான பார்களையும் நடத்தி வருகிறார். 

நேற்று இரவு மதியரசு  வீட்டில் குடும்பத்துடன்  தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணிக்கு யாரோ கதவை பலமாக தட்டும் சத்தம் கேட்டது. உடனே மதியரசு எழுந்து சென்று கதவை திறந்தார். அங்கு 7 பேர் முகமூடி அணிந்த நிலையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களின் கையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. 

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மதியரசு கூச்சல் போட்டார். உடனே கொள்ளையர்களில் ஒருவன் கத்தியால் மதியரசுவின் தோள், கை, முகத்தில் சரமாரியாக வெட்டினான். 
அவர் அலறியடியே ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சாய்ந்தார். சத்தம் கேட்டு மதியரசுவின் குடும்பத்தினர் ஓடி வந்தனர். அவர்களையும் கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டினர். 

சத்தம் போட்டால் அனைவரையும் குத்தி கொன்றுவிடுவோம் என்று மிரட்டிய கொள்ளையர்கள் வலுக்கட்டாயமாக சாவியை பிடுங்கினர். 
பின்னர் கொள்ளையர் கள் பீரோவை திறந்து அதிலிருந்த 150 பவுன் நகை, ரூ.2.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்தனர்.

முகமூடி கொள்ளையர் கள் 7 பேரும் சொகுசு காரில் வந்து கொள்ளையடித் துள்ளனர். தாங்கள் வந்த காரை மதியரசுவின் வீட்டு முன்பு அவர்கள் துணிச்சலாக நிறுத்தி இருந்தனர். கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு 7 பேரும் நகை-பணத்துடன் காரில் ஏறி தப்பி சென்றனர். மதியரசுவை வெட்டிய கொள்ளை கும்பல் மைத்துனர் சரவணனின் கை, கால்களை கட்டிப்போட்டு விட்டு தப்பி சென்றது. கொள்ளையர்கள் சென்றதும் மதியரசுவின் குடும்பத்தினர் கூச்சல் போட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்தனர். 
பரபரப்பு
இதையடுத்து அருகில் உள்ள வீடுகளில் வசித்தவர் களும் அங்கு திரண்டனர். இதுபற்றி அவர்கள் உடனடி யாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். திருவான்மியூர் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தென் சென்னை இணை கமிஷனர் அன்பு, தி.நகர் துணை கமிஷனர் சரவணன் ஆகியோரும் விரைந்து வந்து கொள்ளை சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.  

உடனடியாக கொள்ளை யர்களை பிடிக்க போலீஸ் நடவடிக்கை தீவிரமானது. வயர்லஸ் மூலமாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு வாகன சோதனையும் முடுக்கிவிடப்பட்டது. இந்த சோதனை விடிய விடிய நீடித்தது. இன்று காலையிலும் அது தொடர்ந்தது. ஆனால் கொள்ளையர்கள் போலீசில் சிக்காமல் தப்பிவிட்டனர். அவர்களை பிடிக்க தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. 

இதற்கிடையே கொள்ளை யர்களால் வெட்டப்பட்ட மதியரசு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

ad

ad