புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூன், 2016

கோபா அமெரிக்கா கால்பந்து அர்ஜென்டினா, சிலியை 2-1 கோல் கணக்கில் வீழ்த்தியது


45-வது கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற 16 அணிகளும் 4 பிரிவாக
பிரிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற் றுள்ளன. ‘லீக்’ முடிவில் 4 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்அவுட்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

‘டி’ பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா-சிலி அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக் கத்தில் இருந்தே அர்ஜென்டினா ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் முதல் பாதி ஆட்டத்தில் அந்த அணி கோல் எதுவும் அடிக்கவில்லை. 2-வது பாதி ஆட்டத்தில் அந்த அணி வீரர்களின் ஆதிக்கம் தொடர்ந்து குறிப்பாக டிமாரியா சிறப்பாக விளையாடினார். ஆட்டத்தின் 49-வது நிமிடத்தில் அவர் கோல் அடித்தார். 58-வது நிமிடத்தில் அர்ஜென்டினா 2-வது கோலை அடித்தது. இந்த கோலை பனேகா அடித்தார்.ஆட்டம் முடியும் தருவாயில் சிலி அணி ஆறுதல் கோல் அடித்தது. ஜோஸ்பெட்ரா இந்த கோலை அடித்தார். முடிவில் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில்  பொலிவியா- பனாமா அணிகள் மோதின. இதில் பொலிவியா எதிர்பாராத வகையில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. பனாமா 2-1 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை வீழ்த்தியது. பனாமா அணியில் பெரஸ் 2 கோலும் (11 மற்றும் 87-வது நிமிடம்), பொலிவியா அணியில் கார்லோஸ் ஆர்சேயும் (54-வது நிமிடம் கோல்) அடித்தனர்.

நாளை நடைபெறும் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள கொலம்பியா-பராகுவே அணிகளும் அமெரிக்கா- கோஸ்டாரிகா அணிகளும் மோதுகின்றன.
கொலம்பியா தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவை வீழ்த்தி இருந்தது. இதனால் பராகுவேயை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. பராகுவே தொடக்க ஆட்டத்தில் கோஸ்டாரி காவுடன் கோல் எதுவுமின்றி ‘டிரா’ செய்தது. அமெரிக்கா, கோஸ் டாரிகா அணிகள் முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளன

ad

ad