புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூன், 2016

யூரோ 2016 கால் பந்து திருவிழாவுக்கு தயாராகும் ஃபிரான்ஸ்!


பிரான்ஸ் நாட்டில், வரும் ஜூன் 10 ம் தேதி யூரோ கால்பந்துப் போட்டிகள்
 நடக்கவிருக்கின்றன. முதல் முறையாக 24 நாடுகள் இறுதிச் சுற்றுக்கு
தகுதி பெற்றுள்ளன.


ஹென்றி தௌலாண்ட் என்பவர், 1927 ல் பி்ரான்ஸ் கால்பந்து சங்கத்தின் செயலாளராக இருந்தார். அவர்தான் இதற்கான ஐடியாவை கொடுத்தது முதல் பல்வேறு வேலைகளையும் செய்து வந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, 1960 ல் யூரோ விளையாட்டு ஆரம்பிக்கும்போது அவர் இறந்து விட்டார். அதனால்  அவர் நினைவாகவே அந்த கோப்பைக்கு அவரின் பெயர் வைக்கப்பட்டது.

இந்தப் போட்டிகளில் ஒன்றுபட்ட சோவியத் யூனியன், முதல் கோப்பையை வென்றது.
og-default.jpg
இதுவரை நடந்துள்ள 14 இறுதிப் போட்டிகளில் ஜெர்மனி, ஸ்பெயின் 3 முறையும், பிரான்ஸ் 2 முறையும்  சோவியத் யூனியன், நெதர்லாந்து, செக்கஸ்லோவோகியா, டென்மார்க், கிரீஸ், இத்தாலி ஆகிய நாடுகள்  ஒரு முறையும் இந்த கோப்பைகளை கைப்பற்றின.

வெள்ளியினால் ஆன இந்த கப்பின் எடை தற்போது 8 கிலோவாகவும், அகலம் 60 செ.மீ ஆகவும் உள்ளது.

போனமுறை போலந்து, உக்ரைன் சேர்ந்து நடத்திய இறுதிப் போட்டியை 30 கோடி மக்கள் பார்த்தார்கள்.இந்த முறை இன்னும் அதிகமான மக்கள் பார்வையாளர்களாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் விசேஷம் என்னவென்றால் போட்டியினை நடத்தும் நாடு, இறுதிச்சுற்றுக்கு  நேரடியாக தகுதி பெறும்.உலகக் கோப்பை போல அதற்கு முந்தையக் கோப்பையை வாங்கிய அணியும் தகுதிச் சுற்றில் சேர்ந்துதான் வரவேண்டும்..

உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள், ஃபிரான்சில் இந்த வாரமே குவியத் துவங்குவார்கள். ஜூன் 10 முதல் ஜூலை 10 வரை ஒரு மாத காலம் ஃபிரான்ஸ் நாட்டில் திருவிழா கொண்டாட்டம்தான்!



    அதிக கோல்களை அடிக்கும் வீரர்களுக்கான பந்தய வெற்றி அளவீடு
    T. Müller              8,00   
    C. Ronaldo          9,00   
    A. Griezmann      11,00   
    H. Kane               13,00   
    O. Giroud            15,00   
    R. Lewandowski  17,00   
    R. Lukaku            21,00
    கோப்பையை வெல்லும் நாடுகளுக்கான பந்தய வெற்றி அளவீடு
    பிரான்ஸ்        4,2   
    ஜேர்மனி        4,5   
    ஸ்பெயின்      6,0   
    இங்கிலாந்து 9,5   
    பெல்ஜியம்     12   
    இத்தாலி          17   
    போர்த்துக்கல்21   
    குராசியா       29   
    ஆஸ்திரியா    41   
    சுவிஸ்             67   
    துருக்கி           81

    ad

    ad