புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூன், 2016

21 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் கெஜ்ரிவால் அரசுக்கு நெருக்கடி

இரட்டைபதவி சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்காததால் 21 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு கெஜ்ரிவால்
அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ க்கள் 21 பேர் மந்திரிகளுக்கு உதவியாக சட்டசபை செயலாளர்களாக கடந்த 2015-ம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். இந்தப் பதவி இணை மந்திரி அந்தஸ்திலானது.

டெல்லி மாநில அரசு சட்டத்தின்படி முதல்-மந்திரி அலுவலகத்துக்கு மட்டுமே ஒரு செயலாளரை நியமிக்க முடியும். 21 எம்.எல்.ஏக்கள் ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிக்கிறார்கள். இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது எனவே 21 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷனில் வக்கீல் பிரசாந்த் படேல் புகார் மனு அளித்தார்.
ஜனாதிபதிக்கும் இது தொடர்பாக புகார் மனுக்கள் அனுப்பபட்டன. அர் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைத்தார்.

இதை விசாரித்த தேர்தல் கமிஷன், எம்.எல்.ஏ பதவியில் இருந்து உங்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு 21 எம்.எல்.ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.
மேலும் ஒரு தொண்டு நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதில் டெல்லி மாநில அரசு சட்டத்தின் படி 7 மந்திரிகள் மட்டுமே இருக்க முடியும். ஆனால் தற்போது 21 பேர் இணைமந்திரிகள் அந்தஸ்தை அனுபவிக்கிறார்கள், இது சட்ட விரோதமானது, அதனால் 21 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதேபோல் காங்கிரஸ் குழுவினரும் தேர்தல் கமிஷனரை சந்தித்து 21 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

இதற்கிடையே 21 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்க நடவடிக்கையில் இருந்து பாதுகாக்கும்வகையில் டெல்லி சட்டசபை உறுப்பினர்கள் சட்டம் 1997-ல் திருத்தம் கொண்டு வந்து சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு டெல்லி மாநில அரசு அனுப்பிவைத்தது ஆனால் இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்காமல் நிராகரித்து  விட்டார்.

இதையடுத்து 21 எம்.எல்.ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பது பற்றி தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தி வருகிறது. 21 எம்.எல்.ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் கெஜ்ரிவால் அரசுக்கு நெருக்கடி ஏற்படும். 

எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட்டால் அடுத்த 6 மாதத்தில் 21 தொகுதிகளுக்கும் மினி பொதுத் தேர்தல் போல் இடைத்தேர்தல் நடைபெறும். கெஜ்ரிவால் ஆட்சிக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு இதில் பிரதிபலிக்கும்  இந்த பிரச்சினை கெஜ்ரிவால் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கெஜ்ரிவால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டாலும் கவிழும் வாய்ப்பும் இல்லை. ஏனெனில் மொத்தம் 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்ட சபையில் ஆம் ஆத்மியின் பலம் 67 ஆக உள்ளது இதில் 21 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் அக்கட்சிக்கு 46 எம்.எல்.ஏக்கள் பலம் இருக்கும். அறுதிப்பெரும்பான்மைக்கு 36 எம்.எல்.ஏக்களே தேவைப்படுவதால் டெல்லி அரசு கவிழும் அபாயம் இல்லை என்று கூறப்படுகிறது.

ad

ad