புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூன், 2016

மாற்று ஆட்டக்காரர்களால் வெற்றி பெற்ற இங்கிலாந்து 2–1 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை தோற்கடித்தது

ஐரோப்பிய கால்பந்து போட்டியில் ‘பி’ பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தும், வேல்சும் மோதின. பந்தை கட்டு
ப்பாட்டில் (65 சதவீதம்) வைத்திருப்பது, கடத்தி கொடுப்பது, ஆக்ரோஷம் காட்டுவது இப்படி எல்லா வகையிலும் இங்கிலாந்து வீரர்களின் கை படுஜோராக ஓங்கி இருந்தாலும், முதல் அதிர்ஷ்டம் கிட்டியது என்னவோ வேல்ஸ் அணிக்கு தான். 42–வது நிமிடத்தில் ‘பிரிகிக்’ வாய்ப்பில் வேல்ஸ் வீரர் காரெத் பாலே பிரமாதமாக கோல் அடித்தார். 25 மீட்டர் தூரத்தில் இருந்து இடது காலால் அவர் உதைத்த பந்து, இங்கிலாந்து கோல் கீப்பர் ஜோ ஹர்ட்டின் கையை தட்டிக்கொண்டு கோல் வலைக்கு முத்தமிட்டது. இதனால் இங்கிலாந்து வீரர்களுக்கு நெருக்கடி உருவானது.
பிற்பாதியில் மாற்று ஆட்டக்காரராக இறங்கிய இங்கிலாந்தின் ஜாமி வார்டி 56–வது நிமிடத்தில் கோல் போட்டு ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார். இதன் பின்னர் கடைசி நிமிடத்தில் இன்னொரு இங்கிலாந்தின் மாற்று வீரர் டேனியல் ஸ்டுரிட்ஜ், வேல்ஸ் முன்கள வீரர்களை ஏமாற்றி லாவகமாக பந்தை கோலுக்குள் திருப்பினார். திரிலிங்கான இந்த ஆட்டத்தின் இறுதியில் இங்கிலாந்து அணி 2–1 என்ற கோல் கணக்கில் முதலாவது வெற்றியை சுவைத்தது. தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து அணி ரஷியாவுடன் டிரா செய்திருந்தது. முதலாவது ஆட்டத்தில் சுலோவக்கியாவை வென்று இருந்த வேல்ஸ் அணிக்கு இது முதலாவது தோல்வியாகும். இதன் மூலம் 32 ஆண்டுகளாக இங்கிலாந்தை வென்றதில்லை என்ற வேல்ஸ் அணியின் சோகம் தொடருகிறது.

ad

ad