புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூன், 2016

ஐரோப்பிய கால்பந்து: பிரான்ஸ் அணி 2–வது சுற்றுக்கு முன்னேற்றம் கடைசி நிமிடங்களில் கோல் போட்டு அல்பேனியாவை வீழ்த்தியது

ஐரோப்பிய கால்பந்து போட்டியில், அல்பேனியாவுக்கு எதிரான மோதலில் கடைசி நிமிடங்களில் அடுத்தடுத்து இரு கோல்கள்
போட்டு பிரான்ஸ் அணி வெற்றி பெற்று 2–வது சுற்றுக்கு முன்னேறியது.
ஐரோப்பிய கால்பந்து
15–வது ஐரோப்பிய கால்பந்து திருவிழா (யூரோ) பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகளும், 3–வது இடத்தை பிடிக்கும் சிறந்த 4 அணிகளும் என்று மொத்தம் 16 அணிகள் 2–வது சுற்றுக்கு (நாக்–அவுட் சுற்று) தகுதி பெறும்.
இந்த நிலையில் ‘ஏ’ பிரிவில் நேற்று முன்தினம் இரவு மார்செலி நகரில் நடந்த லீக் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் பிரான்சும், அறிமுக அணியான அல்பேனியாவும் மோதின. உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நுழைந்த பிரான்ஸ் அணியினர், தொடக்கத்தில் இருந்தே மின்னல் வேக தாக்குதல் பாணியை கையாண்டனர். ஆதிக்கம் செலுத்திய அனுபவம் வாய்ந்த பிரான்ஸ் வசமே பந்து (59 சதவீதம்) அதிகமான நேரம் வலம் வந்தது. ஆனால் அல்பேனியா வீரர்களின் தற்காப்பு அரணை அவ்வளவு எளிதில் உடைக்க முடியவில்லை.
கடைசி நிமிட கோல்கள்
அல்பேனியாவை பொறுத்தவரை கோல் அடிக்க முயற்சிப்பதை காட்டிலும் எதிரணியின் வாய்ப்பை தடுக்கும் நோக்குடனே செயல்பட்டனர். தங்கள் கோல் பகுதியை பிரான்ஸ் வீரர்கள் நெருங்கினாலே உடனடியாக சுற்றி வளைத்து அணை கட்டி முடக்கி விடுவார்கள். இதனால் பிரான்ஸ் வீரர்களின் பல ஷாட்கள் கம்பத்திற்கு வெளியே வீணாக பறந்தன. 89–வது நிமிடம் வரை இரு அணி வீரர்களும் இலக்கை குறி வைத்து துல்லியமாக ஒரு ஷாட் கூட உதைக்கவில்லை என்பது ஆச்சரியமான உண்மையாகும்.
ஆட்டம் ‘டிரா’வை நோக்கி நகர்ந்த நிலையில் 90–வது நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரர் ஆன்டோனி கிரிஸ்மான், எதிரணியின் முட்டுக்கட்டைக்கு முடிவு கட்டினார். சக வீரர் அடில் ராமி அடித்த பந்தை கிரிஸ்மான் தலையால் முட்டி கோலுக்குள் திருப்பினார். கிரிஸ்மானுக்கு முன் நின்ற இன்னொரு பிரான்ஸ் வீரர் பால் போக்பா தலையால் முட்டி தள்ள முயற்சிப்பார் என்ற நினைப்புடன் அல்பேனியா கோல் கீப்பர் எட்ரிட் பெரிஷா அதற்கு ஏற்ப வலைக்குள் ஒரு பக்கம் நின்றிருந்தார். ஆனால் பந்து போக்பாவை தாண்டி கிரிஸ்மான் பக்கம் சென்றதால், பெரிஷாவினால் சுதாரிக்க முடியாமல் போய் விட்டது. வழக்கமான 90 நிமிடங்கள் முடிந்து காயம் உள்ளிட்ட விரயத்திற்காக கூடுதலாக 6 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. இதன் கடைசி நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் டிமிட்ரி பயேத் இன்னொரு கோல் அடித்து அமர்க்களப்படுத்தினார்.
ஐரோப்பிய கால்பந்து போட்டியில், அல்பேனியாவுக்கு எதிரான மோதலில் கடைசி நிமிடங்களில் அடுத்தடுத்து இரு கோல்கள் போட்டு பிரான்ஸ் அணி வெற்றி பெற்று 2–வது சுற்றுக்கு முன்னேறியது.

ad

ad