புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூன், 2016

இந்தியாவுக்கு அதிர்ச்சி தந்த ஜிம்பாப்வே 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியஇந்தியா

இந்தியா-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில்
நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி  20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது. இந்தியத் தரப்பில் பூம்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ராகுல், மன்தீப் சிங் களமிறங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் டக் அவுட் முறையில் வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய ராயுடு, மன்தீப் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ராயுடு 19 ரன்களில் வெளியேற அடுத்து வந்த பாண்டே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மறுமுனையில் அவருக்கு பக்கபலமாக இருந்த மன்தீப் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்ன களமிறங்கிய ஜெயந்த் யாதவ் 19, அக்ஷர் படேல் 18 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணியின் வெற்றி கேள்வி குறியானது. இறுதியில் இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் மட்டுமே எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தோனி 19 ரன்களுகளுடனும், ரிஷி தவான் ஒரு ரன்னுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஜிம்பாப்வே தரப்பில் சாமு சிபாபா, ரிச்மான்ட் முதும்பாமி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.இந்தியாவுக்கு அதிர்ச்சி தந்த ஜிம்பாப்வே

ad

ad