புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூன், 2016

யூரோ கால்பந்து போட்டியில் சுவிட்சர்லாந்து அணி 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்



யூரோ கால்பந்து போட்டி பிரான்சில் நடைபெற்று வருகிறது. இதில் பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.  இதில் பிரான்ஸ்  அணி எதிர்பார்த்ததை விட  மிகவும் பலவீனமாக  இருந்தது . சுவிஸ்   67  வீதம்  பந்தினை  தம்  வசம்  வைத்திருந்தாலும் கோலினை   போடாமல்   தவித்தஹு இறுதியில் 0-0 என்ற சமநிலை கிடைத்தது இதனால் 2-வது சுற்றுக்கு முன்னேறியது சுவிட்.  ‘ஏ’ பிரிவில் கடைசி ‘லீக்’ ஆட்டங்கள் நேற்று நடந்தது. ஆட்டத்தில் பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து அணிகள்  மோதின. இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி ‘டிரா’வில் முடிந்தது. இதன்மூலம் சுவிட்சர்லாந்து 2-வது  சுற்றுக்கு முன்னேறியது. அந்த அணி 3 ஆட்டத்தில் 1 வெற்றி, 2 டிராவுடன் 5 புள்ளிகள் பெற்றது.  பிரான்ஸ் அணி ஏற்கனவே ‘நாக்அவுட்’ சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தது. அந்த அணி 2 வெற்றி, 1 டிராவுடன் 7 புள்ளிகள் பெற்று அந்த பிரிவில் முதல் இடத்தை பிடித்தது.

யூரோ கால்பந்து  இன்று  நடைபெறும் ‘பி’ பிரிவு ஆட்டங்களில் ரஷியா- வேல்ஸ், இங்கிலாந்து- சுலோவாக்கியா அணிகள் போட்டியிடுகின்றன. இங்கிலாந்து 4 புள்ளியுடனும், வேல்ஸ், சுலோவாக்கியா  தலா 3 புள்ளிகளுடனும், ரஷியா 1 புள்ளியுடனும் இதுவரை பெற்றுயுள்ளது.

ad

ad