புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூன், 2016

சுவாதி கொலையில் போலீஸ் செயல்பாட்டுக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்: 2 நாளில் கொலையாளியை கைது செய்ய கெடு

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐ.டி. பெண் நிறுவன ஊழியர் சுவாதியின் கொலை வழக்கில் காவல்துறையின் செயல்பாட்டுக்கு ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இரண்டு நாளில் கொலையாளியை கைது செய்ய வேண்டும் என்றும் கெடு விதித்துள்ளது. 

சுவாதியின் கொலை சம்பவம் தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நாகமுத்து மற்றும் பாரதிதாசன் அமர்வு, தமிழக அரசின் வழக்கறிஞரை அழைத்து விளக்கம் கேட்டனர். 

கொலை நடந்து 3 நாட்களாகியும் குற்றவாளியை கைது செய்யாதது ஏன். ரயில்வே போலீசாருக்கும், சென்னை போலீசாருக்கும் இடையே நிலவும் மோதல் போக்கால் விசாரணையில் தாமதம் ஏற்பட்டுள்ளது உண்மையா. குற்றவாளியை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், உயர்நீதிமன்றம் தாமாகவே முன் வந்து விசாரிக்கும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர். 

இதையடுத்து மதியம் ஆஜரான அரசு வழக்கறிஞர் சண்முக வேலாயுதம், சுவாதி கொலை வழக்கு ரயில்வே போலீசாரிடம் இருந்து, நுங்கம்பாக்கம் காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. குற்றவாளியை பிடிக்க கூடுதல் ஆணையர் தேவராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மத்தியக் குற்றப்பிரிவு, சிபிசிஐடி போலீசார் தனிப்படைக்கு உதவுவார்கள் என்றார்.

அப்போது, வழக்கு விசாரணையை மாற்றுவதற்கு 3 நாட்கள் தேவையா. சுவாதியின் கொலை சம்பவத்தில் தொடக்கம் முதலோ காவல்துறையின் செயல்பாடு சரியாக இல்லை. கொல்லப்பட்டு இரண்டு மணி நேரம் ஆகியும் சுவாதியின் உடலை துணியால் கூட போலீசார் மூடாதது ஏன். சிசிடிவி காட்சிகள் இருந்தும் குற்றவாளியை பிடிப்பதில் தாமதம் ஏன். இரண்டு நாட்களுக்குள் குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று கெடு விடுத்தனர்.

ad

ad