புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூன், 2016

நீச்சல் உடை அணிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பாடசாலையில்நீ ச்சல் பயிற்சிக்கு செல்லாத 2 இஸ்லாமிய சிறுமிகளுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ள சம்பவம்

சுவிட்சர்லாந்து நாட்டில் நீச்சல்   உடை அணிந்து  கொள்ள வேண்டும் என்பதற்காக  பாடசாலையில்நீ ச்சல் பயிற்சிக்கு  செல்லாத  
இரண்டு இஸ்லாமிய சிறுமிகளுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சுவிஸின் பேசல் மாகாணத்தில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த 12 மற்றும் 14 வயதுடைய சிறுமிகள் பெற்றோருடன் வசித்து வருகின்றனர்.
கடந்தாண்டு இவர்கள் இருவரும் குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்தபோது இவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது நேற்று தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பேசல் மாகாண அரசு சட்டப்படி, பள்ளிகளுக்கு செல்லும் மாணவிகள் கட்டாயம் நீச்சல் பயிற்சியில் ஈடுப்பட்டு அந்தக் கலையை நிச்சயம் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஆனால், இரண்டு சிறுமிகளும் இஸ்லாமியர்கள் என்பதால், அவர்கள் நீச்சல் பயிற்சி வகுப்பை தவிர்த்து வந்துள்ளனர்.
இதன் மூலம், குடியுரிமை பெறும் தகுதியையும் இருவரும் இழந்துள்ளனர். இது தொடர்பாக குடியுரிமை வழங்கும் கமிட்டியை சேர்ந்த Stefan Wehrle என்பவர் பேசியபோது, ‘பேசல் மாகாணத்தில் வசிக்கும் அகதிகள் குடியுரிமை பெற வேண்டும் என்றால் மாகாண விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
இரு மாணவிகளும் நீச்சல் பயிற்சியில் பங்கேற்காத காரணத்தினால் அவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது வரவேற்க வேண்டிய நடவடிக்கை தான்’ என கருத்து தெரிவித்துள்ளார்.
நீச்சல் பயிற்சியை தவிர்த்த சிறுமியின் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அகதிகளை ஒருங்கிணைக்கும் பணிக்கு பிறகு தான் மதக்கொள்கைகள் இடம்பெற வேண்டும் என பெற்றோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ad

ad