புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2016

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 33 இலங்கையர்கள் கைது!

தமிழ்நாடு, பழவேற்காடு, திருக்கழுகுன்றம் பகுதிகளில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்ற 33 இலங்கை அகதிகளை பொலிஸார் தடுத்து
நிறுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, புழல் மற்றும் வேலூர் பகுதிகளில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களைச் சேர்ந்த சிலர் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயல்வதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து பொன்னேரி-பழவேற்காடு சாலையில் போலாட்சியம்மன் கோயில் குளம் அருகே அமைந்துள்ள சோதனைச் சாவடியில் திருப்பாலைவனம் பொலிஸார் நேற்று முன்தினம் புதன்கிழமை நள்ளிரவு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த வேனை மடக்கி சோதனையிட்டனர். அதில் 18 பேர் இருந்தனர். விசாரணையில் அவர்கள் அனைவரும் கும்மிடிப்பூண்டி, வேலூர், பவானிசாகர் பகுதிகளில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்கள் எனத் தெரிய வந்தது.
அனைவரும் பழவேற்காடு சென்று, அங்கிருந்து கப்பல் மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அகதிகளை ஏற்றிவந்த வேனை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அகதிகளை திருப்பாலைவனம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதேபோன்று சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஜனப்பச்சத்திரம் கூட்டுச் சாலை சந்திப்பில் சோழவரம் பொலிஸார் நடத்திய வாகனச் சோதனையில் ஒரு வேனில் வேலூர், புழல் பகுதியைச் இலங்கை அகதிகள் 10 பேர் இருந்ததையடுத்து அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதில் இருந்த 10 பேரிடமும் சோழவரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தை அடுத்த பெருமாள்சேரியில் இலங்கை அகதிகள் தொடர்பாக மாமல்லபுரம் டி.எஸ்.பி. சேகருக்கு பொதுமக்கள் அளித்த தகவலை யடுத்து சதுரங்கப்பட்டிணம் பொலிஸார் அங்கு சென்று சில வீடுகளை சோதனையிட்டனர்.
போலீஸார் வருவதை அறிந்த 5 அகதிகள் தப்பினர். கெளரிதரன் (26), ஜீவிதன் (18), ஜெயசுந்தர்ராஜன் (45), சசிதரன் (34), பிரதீபன் (29) ஆகிய 5 பேர் மட்டும் பொலிஸாரிடம் சிக்கினர்.
விசாரணையில் இவர்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு அகதிகள் முகாம்களில் இருந்து இங்கு அழைத்து வரப்பட்டிருந்தது தெரியவந்தது.
இவர்கள் மாமல்லபுரத்தில் இருந்து படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
இவர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ad

ad