புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூன், 2016

காங்கேசன் சீமெந்து தொழிற்சாலை காணியில் 400 குடும்பங்கள் மீள்குடியேற்றம்

காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 65 ஹெக்டேயர் காணியினை விடுவித்து, அதில் 400 இடம்பெயர்ந்த குடும்பங்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வகையில், கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-
”வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இவ்வருடம் மார்ச் மாத இறுதிவரையில் 251,000 இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். எனினும், இன்னும் 14,000 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவுள்ளன. இக்குடும்பங்களில் 11,000 குடும்பங்கள் யாழ் மாவட்டத்திலேயே இருக்கின்றன. தற்போது யாழ் மாவட்டத்தில் 1,109 குடும்பங்கள் தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 31 நலன்புரி நிலையங்களில் வாழ்கின்றன. அக் குடும்பங்களில், 641 குடும்பங்கள் காணியற்ற குடும்பங்களாக அறிக்கையிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், நலன்புரி நிலையங்களினூடாக, இடம்பெயர்ந்த குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கு, காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 65 ஹெக்டேயர் காணி அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த இடத்தில் யாழ்.தெல்லிப்பழை பிரதேசத்தில் காணப்படுகின்ற 400 இடம்பெயர்ந்த குடும்பங்களை உடனடியாக மீள்குடியேற்ற முடியும். எனவே குறித்த காணியினை விடுவித்து அதனை அரச உடைமையாக்கி, உடனடியாக பகிர்ந்தளிப்பதற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதனால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது” என்றார்

ad

ad