புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூன், 2016

ஐ.எஸ்.குழுவில் மத்திய புலனாய்வு அமைப்பின் கண்காணிப்பில் 400 சுவிஸ் இளைஞர்கள்

ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய புலனாய்வு சேவை அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுவிஸ் இளைஞர்கள் இருவர் ஐ.எஸ். தீவிரவாத குழுவில் இணைந்து போரிடும் நோக்கத்தில் பயணம் மேற்கொள்ள முயன்றதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மத்திய புலனாய்வு அமைப்பின் தகவலின்படி கடந்த 2001ம் ஆண்டு முதல் இதுவரை 76 சுவிஸ் இளைஞர்கள் ஐ.எஸ் குழுவினருடன் இணைந்து ஜிகாதிகளாக மாறியுள்ளனர்.
இதில் 21 பேர் சிரியா மற்றும் ஈராக் பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். எஞ்சியவர்கள் தற்போதும் கலவர பகுதிகளில் தங்கி போரிட்டு வருவதாக புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஜிகாதிகளின் புகலிடமாக தற்போதும் சிரியா மற்றும் ஈராக் பகுதிகள் விளங்கி வருவதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரு நாடுகளைத் தவிர சோமாலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகள் என ஜிகாதிகளுக்கு புகலிடம் தரப்படுகிறது.
கடந்த சில மாதங்களில் சிரியா பகுதியில் இருந்து சுவிஸ் ஜிகாதி ஒருவர் திரும்பி வந்ததை அடுத்து, சுவிஸ் திரும்பியவர்களின் எண்ணிக்கை 13 என உயர்ந்துள்ளது.
மத்திய புலனாய்வு அமைப்பின் கண்காணிப்பில் 400 சுவிஸ் இளைஞர்கள் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதில் பெரும்பாலானோர் தீவிரவாதத்திற்கு துணை போனதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள்.
ஜிகாதிகள் என அடையாளம் காணப்பட்ட 60க்கும் மேற்பட்ட சுவிஸ் இளைஞர்கள் மீது வழக்கு பதிந்துள்ளதாக சுவிஸ் அட்டர்னி ஜெனரல், மைக்கேல் Lauber கடந்த மார்ச் மாதம் தெரிவித்துள்ளார்.

ad

ad