புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2016

ஜெயலலிதா தனது அரசியல் பாதையை புதிய வழியில் மாற்ற திட்டமா எதிர்களின்மி கண்ணில் ..முழுவதும் 500 மதுக்கடைகள் ஒரு வாரத்தில் மூடப்படும்: கலெக்டர்கள் அறிக்கை தாக்கல்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் 500 மதுக்கடைகள் இன்னும் ஒரு வாரத்தில் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
.தமிழகத்தில் அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தையும் மூடி, முழுமையான மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று எல்லா கட்சிகளும் வலியுறுத்தின.
கடந்த மாதம் நடந்த சட்டசபை தேர்தலின் போது மதுவிலக்கு கோஷம் அதிகமாக எதிரொலித்தது. தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் முழு மதுவிலக்கு உடனடியாக கொண்டு வரப்படும் என்று கூறியிருந்தது.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டில் மதுவிலக்கு படிப்படியாக கொண்டு வரப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார். தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததும், கடந்த மாதம் 23-ந்தேதி முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா முதல் நாள் 5 திட்டங்களை அமல்படுத்த முதல் கையெழுத்திட்டார்.
அதில் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதியின்படி முதல் கட்டமாக 500 கடைகளை மூடுவதற்கான கோப்பில் அவர் கையெழுத்திட்டது முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த உத்தரவின் படி டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கும் நேரத்தையும் குறைத்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்திருந்தார்.
அதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 6500 டாஸ்மாக் மதுக்கடைகள் காலை 10 மணிக்கு திறக்கப்படுவதற்கு பதில் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் நடைமுறை கொண்டு வரப்பட்டது. கடந்த மாதம் 24-ந் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளது.
இதற்கிடையே முதல் கட்டமாக மூட உத்தரவிடப்பட்டுள்ள 500 மதுக்கடைகள் தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும், தங்கள் மாவட்டத்தில் எந்தெந்த ஊர்களில், எந்தெந்த பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை மூடலாம் என்ற பட்டியலை தயாரித்து அறிக்கையாக கொடுத்தனர்.
தமிழ்நாட்டில் பல ஊர்களில் பள்ளிக்கூடங்கள் அருகிலும், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் அருகிலும் பல டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. அந்த மதுக்கடைகளை முதலில் மூட வேண்டும் என்று கலெக்டர்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
சில ஊர்களில் தங்கள் பகுதியில் மதுக்கடைகள் திறக்கக் கூடாது என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த மதுக்கடைகளும் முதலில் மூடப்படும் 500 கடைகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. மார்க்கெட் அருகில் உள்ள மதுக்கடைகளையும் மூட கோரிக்கைகள் எழுந்துள்ளன.
சென்னை மாவட்ட கலெக்டர் தனது பரிந்துரை கடிதத்தில் முதலில் 50 மதுக்கடைகளை மூடலாம் என்று பட்டியல் தயாரித்து கொடுத்துள்ளார். அதில் பெரும்பாலான கடைகள் வழிபாட்டு தலங்கள் அருகில் உள்ள கடைகளாகும்.
மற்ற மாவட்ட கலெக்டர்கள் கொடுத்துள்ள பட்டியலில் தலா 10 முதல் 20 மதுக்கடைகளை அகற்றலாம் என்று மூடப்பட வேண்டிய மதுக்கடைகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலை வைத்து எந்தெந்த மதுக்கடைகளை முதலில் மூடுவது என்று டாஸ்மாக் நிறுவன உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுபற்றி மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டதை தொடர்ந்து 500 மதுக்கடைகளை மூடுவதற்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அது ஆய்வில் உள்ளது. மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து இதற்கான பட்டியலும் வந்து விட்டது. தற்போது இது அரசின் ஆய்வில் உள்ளது.
இதில் இறுதி முடிவு எடுக்கப்பட்டதும் உடனடியாக 500 மதுக்கடைகள் மூடப்படும். மாவட்ட வாரியாக எந்தெந்த பகுதிகளில் உள்ள கடைகள் மூடப்படும் என்ற பட்டியல் இன்னும் 1 வாரத்தில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ad

ad