புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2016

ஈராக்கின் பலூஜா நகரில் இருந்து தப்ப முயன்ற 500க்கும் அதிகமான ஐ.எஸ். போராளிகள் கைது


முற்றுகையில் இருக்கும் பலூஜா நகரில் இருந்து தப்பிவரும் பொதுமக்களுடன் சேர்ந்து ஐ.எஸ். போராளிகளும் தப்பிச் செல்ல முயற்சிப்பதாக
ஈராக் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
பலூஜா நகரை மீட்கும் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் ஈராக் படையினர், பொதுமக்களுடன் கலந்து தப்ப முயன்ற 500க்கும் அதிகமான ஐ.எஸ். உறுப்பினர்களை கைது செய்துள்ளனர்.
“கடந்த இரு வாரங்களில் இடம்பெயர்ந்து வரும் பொதுமக்களை சாதகமாக பயன்படுத்தி தப்ப முயன்ற 546 தீவிரவாத சந்தேக நபர்களை நாம் கைது செய்திருக்கிறோம்” என்று அன்பார் மாகாண தலைமை பொலிஸ் அதிகாரி ஹதி ரியாசஜ் குறிப்பிட்டுள்ளார்.
“இவ்வாறான பலரும் போலியான அடையாள அட்டையை பயன்படுத்துகின்றனர்” என்று பலூஜாவின் தெற்கு முனையில் இருக்கும் ரியாசஜ் குறிப்பிட்டார்.
பலூஜா நகரில் இருந்து தப்பிவரும் பொதுமக்களில் பதின்ம வயது கொண்ட சிறுவர்கள் மற்றும் வயது வந்த ஆண்கள் தனியாக பிரிக்கப்படுவதோடு, அவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே விடுவிக்கப்படுகின்றனர்.
கடந்த வாரம் வரை நகருக்குள் 50,000 சிவிலியன்கள் சிக்கி இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நகரின் மையப் பகுதியில் இருப்பதோடு இங்கு ஐ.எஸ். தனது நிலையை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. தலைநகர் பக்தாதில் இருந்து 50 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் பலூஜா நகரை மீட்கும் படை நடவடிக்கை மூன்று வாரங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.
நகரில் இருந்து பொதுமக்கள் தப்பி வருவதற்கான பாதுகாப்பான பாதை ஒன்றை ஈராக் இராணுவம் கடந்த சனிக்கிழமை ஏற்படுத்தியதோடு அது தொடக்கம் ஆயிரக்கணக்கான மக்கள் தப்பி இராணுவ பகுதிகளுக்கு வந்துள்ளனர்.
அண்மைய தினங்களில் பலூஜா நகரில் இருந்து 7,000க்கும் அதிகமானவர்கள் தப்பி வந்திருப்பதாக ஈராக்கிற்கான ஐ.நா. துணை பிரதிநிதி லிசா கிரன்டே குறிப்பிட்டுள்ளார். ஈராக்கிய படை தற்போது இரண்டாவது பாதுகாப்பான பாதை ஒன்றை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
ஐ.எஸ்ஸின் தற்கொலை தாக்குதல்கள் மற்றும் கண்ணிவெடிகள் காராணமாக கடந்த இரண்டு வாரங்களாக படையினரின் முன்னேற்றம் மந்தமடைந்துள்ளது. எனினும் படையினர் உறுதியாக முன்னேற்றம் கண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பலூஜா நகரில் 1,000 முதல் 2,500 வரையான ஐ.எஸ். போராளிகள் நிலைகொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. எனினும் பலூஜா நகர் ஐ.எஸ்ஸின் ஏனைய பகுதிகளில் இருந்து முற்றாக துண்டிக்கப்பட்டிருப்பதால் இந்த போராளிகள் தப்பிச் செல்ல முடியாத நிலையில் சிக்கியுள்ளனர்.

ad

ad