புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2016

6 நாடுகள் ஆக்கி இந்திய அணிக்கு சர்தார்சிங் கேப்டன்

ஸ்பெயினில் நடைபெறும் 6 நாடுகள் ஆக்கி போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக சர்தார்சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.


ஒலிம்பிக் போட்டிக்கு தயார்

பிரேசில் நாட்டில் உள்ள ரியோடிஜெனீரோவில் ஆகஸ்டு 5-ந் தேதி தொடங்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய ஆக்கி அணி பல்வேறு சர்வதேச போட்டியில் விளையாடி வருகிறது. 

சமீபத்தில் லண்டனில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் 1-3 என்ற கோல் கணக்கில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டு முதல்முறையாக வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்தது.

6 நாடுகள் ஆக்கி 

இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் உள்ள வெலன்சியாவில் 6 நாடுகள் பங்கேற்கும் ஆக்கி போட்டி நடைபெறுகிறது. வருகிற 27-ந் தேதி முதல் ஜூலை 3-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் உலக தர வரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனி, 6-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா, 7-வது இடத்தில் உள்ள இந்தியா, 8-வது இடத்தில் உள்ள நியூசிலாந்து, 11-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின், 12-வது இடத்தில் உள்ள அயர்லாந்து ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. தொடக்க நாளில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஜெர்மனியை சந்திக்கிறது. 

6 நாடுகள் போட்டிக்கான இந்திய ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த சர்தார்சிங் கேப்டனாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த ரூபிந்தர் பால்சிங் அணிக்கு திரும்பி இருக்கிறார். மற்றபடி அணியில் பெரிய மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. 

இந்திய அணி வீரர்கள்

இந்திய ஆக்கி அணி வீரர்கள் வருமாறு:-

கோல் கீப்பர்கள்: ஸ்ரீஜேஷ் (துணைகேப்டன்), விகாஸ் தாயா, பின்களம்: ரூபிந்தர் பால்சிங், ரகுநாத், கோதாஜித்சிங், சுரேந்தர்குமார், ஹர்மன்பிரீத்சிங், பிரேந்திர லக்ரா, நடுகளம்: டானிஷ் முஜ்தபா, சிங்லென்சனாசிங், மன்பிரீத்சிங், சர்தார்சிங் (கேப்டன்), உத்தப்பா, தேவிந்தர், சுனில் வால்மிகி, ஹர்ஜீத்சிங், முன்களம்: தல்விந்தர்சிங், சுனில், ஆகாஷ்தீப்சிங், ரமன்தீப்சிங், நிகின் திம்மையா. 

‘ஒலிம்பிக் போட்டிக்கு முன்பு இந்திய அணியின் பலம், பலவீனத்தை அறிந்து அதனை சரிசெய்து கொள்ள இந்த போட்டி பயனுள்ளதாக இருக்கும். இதில் நமது அணி சிறப்பாக செயல்படும்’ என்று பயிற்சியாளர் ரோலன்ட் ஓல்ட்மான்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

ad

ad