புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜூன், 2016

அதிமுக வெற்றிக்காக 700 கோடி வாங்கினாரா விஜயகாந்த்? புயலை கிளப்பும் புகார்

எல்லாம் தெரிந்தும் அதிமுக வெற்றிக்கு விஜயகாந்த் வழி வகுத்தது ஏன்? அவருக்கும் 700 கோடி ரூபாய் கிடைத்து இருக்கிறது. அதனால்
கட்சியை கைக்கழுவிவிட்டார் என்று மக்கள் தேமுதிக கட்சி நிர்வாகி சந்திரகுமார் புதிய புகாரை கிளப்பியுள்ளார்.
கடந்த சட்டப்பேரவை தேர்லில் தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்எல்ஏக்கள் வி.சி.சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச்.சேகர் உள்ளிட்டவர்கள் கட்சியில் இருந்து விலகி ‘மக்கள் தேமுதிக’ என்ற புதிய கட்சியை தொடங்கியதோடு, திமுகவுடன் கூட்டணி அமைத்து 3 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியை தழுவினர். இந்த நிலையில், சென்னையில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மக்கள் தேமுதிகவை திமுகவுடன் இணைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

ad

ad