புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூன், 2016

எங்களை சுட்டுக் கொன்று விடுங்கள்..!' இந்தோனேசிய போலீஸிடம் கதறும் தமிழ் அகதிகள் (பதற வைக்கும் வீடியோ)

ந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்ததாக சொல்லப்படும் 44 இலங்கை
தமிழ் அகதிகள்,  படகு கோளாறால் இந்தோனேசியாவில் கடந்த 11ம் தேதி தத்தளித்து கொண்டிருந்தனர். அவர்களை இந்தோனேசிய கடற்படை மீட்டது. Aceh என்ற மாகாண கடற்கரையோரம் படகில் ஆறு நாட்களுக்கு மேலாக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பாஸ்போர்ட், பயண ஆவணங்கள் எதும் இல்லாததால் அகதிகளை கரையில் இறக்க இந்தோனேசிய அரசு மறுக்கிறது. இந்த நிலையில் படங்களில் இருந்தவர்கள், எங்களை சுட்டுக் கொல்லுங்கள் என்று கதறினர். நேற்று படகில் இருந்து ஐந்து பெண்கள் வெளியே குதித்துள்ளனர். இவர்களை எச்சரிக்கும் விதத்தில் வானத்தை நோக்கி சுட்டுள்ளது இந்தோனேசிய பாதுகாப்பு படை. இது மாதிரியான அகதிகளின் செயல்களை தடுக்கவே வானத்தை நோக்கி சுட்டதாக இந்தோனேசிய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. 

இந்த சூழலில் கியூடன்யோ, ஆம்னெஸ்டி உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள், அகதிகள் தரையில் இறங்கி ஐ.நா.அதிகாரிகளை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என இந்தோனேசிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.    

இந்தோனேசிய அரசு அகதிகளை திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. ஐ.நா.வின் அகதிகள் உடன்படிக்கையில் இந்தோனேசியா கையெழுத்திடாததால் அகதிகள் அந்நாட்டில் சட்டப்பூர்வமாக வேலை செய்ய முடியாது. தற்போதைய நிலையில் 13 குடியேற்ற தடுப்பு முகாம்களில் 13,679 அகதிகள் உள்ளனர்.
     


இவர்கள் இந்தோனேசியாவிலிருந்து வேறு ஒரு நாட்டில் குடியமர்த்தபடுவதற்காக வைக்கப்பட்டுள்ளனர்.  இந்த நிலைமையில் படகில் உள்ள 44 தமிழ் அகதிகள் தொடர்பாக என்ன முடிவெடுக்கப்படும் என்பது இன்னும் உறுதிப்படத் தெரியவில்லை. 44 அகதிகளில் ஒரு கர்ப்பிணி பெண் உட்பட 15 பெண்கள், 9 குழந்தைகள், 20 ஆண்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுட்டுக் கொன்று விடுங்கள்..!' இந்தோனேசிய போலீஸிடம் கதறும் தமிழ் அகதிகள் (பதற வைக்கும் வீடியோ
)

ad

ad