புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூன், 2016

இந்திய விளையாட்டு செய்திகள்

*6 நாடுகள் பங்கேற்றுள்ள ஆக்கி போட்டி ஸ்பெயின் நாட்டில் உள்ள வெலன்சியாவில் நடந்து வருகிறது. இதில்
ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 0-4 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது.

* உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி அஜர்பைஜான் நாட்டில் உள்ள பாகுவில் நடந்தது. நேற்று நடந்த ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) போட்டியில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் 456.9 புள்ளிகள் குவித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். குரோஷியா வீரர் பீட்டர் கோர்சா 457.5 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

*தொழில்முறை வீரர்களுக்கான ஆசிய பசிபிக் சூப்பர் மிடில் வெயிட் பட்டத்துக்கான குத்துச்சண்டை போட்டி டெல்லியில் ஜூலை 16-ந் தேதி நடக்கிறது. இதில் இந்திய வீரர் விஜேந்தர்சிங், ஆஸ்திரேலியாவின் கெர்ரி ஹோப்பை சந்திக்கிறார். இது குறித்து விஜேந்தர்சிங் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்த போட்டியில் பட்டத்தை வெல்வதற்காக நான் கடினமாக பயிற்சி எடுத்து வருகிறேன். நான் இன்னும் அமெச்சூர் வீரராக தான் இருக்கிறேன் என்று கெர்ரி சொல்லி இருப்பதை படித்தேன். அதற்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை. அதிக நம்பிக்கையுடன் பேசி இருக்கும் கெர்ரிக்கு எனது குத்துகள் பதில் சொல்லும். இந்த போட்டியில் வென்று நாட்டு மக்களுக்கு பெருமை சேர்க்க முடியும் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

*இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி அளித்த ஒரு பேட்டியில், ‘முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது உடல்தகுதியுடன் இருக்கிறேன். 2012-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு தான் உடல்தகுதி விஷயத்தில் தனி கவனம் செலுத்த தொடங்கினேன். முழு உடல்தகுதியுடன் இருக்கும் போது, உங்களால் எதையும் சாதிக்க முடியும் என்று உணர்வீர்கள். அதற்கு ஒரு உதாரணத்தை சொல்கிறேன். இதற்கு முன்பு நான் வேகமாக பீல்டிங் செய்யும் வீரராக செயல்பட்டதில்லை. களத்தில் எல்லா நிலைகளிலும் பீல்டிங் செய்வதற்கு தயாராக இருந்ததில்லை. ஆனால் உடல் தகுதி விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, வலிமை பெற்ற பிறகு, இப்போது என்னால் எந்த இடத்திலும் நின்று சிறப்பாக பீல்டிங் செய்ய முடிகிறது’ என்றார்.

* புரோ கபடி லீக் தொடரில், மும்பையில் நேற்று நடந்த புனே-டெல்லி இடையிலான ஆட்டம் 27-27 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்தது. இன்று நடக்கும் ஆட்டங்களில் ஜெய்ப்பூர்-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 8 மணி), மும்பை-பாட்னா (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

*சர்வதேச ஆக்கி சம்மேளனம் வெளியிட்டுள்ள புதிய தரவரிசையில், உலக சாம்பியன் ஆஸ்திரேலியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. நெதர்லாந்து 2-வது இடத்திலும், ஜெர்மனி 3-வது இடத்திலும், இங்கிலாந்து 4-வது இடத்திலும் உள்ளன. இந்திய அணி 2 இடங்கள் முன்னேறி பெல்ஜியம், அர்ஜென்டினாவை பின்னுக்கு தள்ளிவிட்டு 5-வது இடத்தை பிடித்துள்ளது. சமீபத்தில் சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கியில் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்ததை தொடர்ந்து இந்திய அணிக்கு, இந்த ஏற்றம் கிடைத்துள்ளது.

ad

ad