புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூன், 2016

நெடுங்கேணிப் பகுதியில் தொடரும் யாணையின் தாக்குதல்கள்

நெடுங்கேணிப் பகுதியில் தொடரும் யாணையின் தாக்குதல்களால் தினமும் பல விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரம்
அழிக்கப்படுவதால் உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நெடுங்கேணி ஒலுமடு , பழம்பாசி கிராமசேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய பகுதிகளில் தினமும் நள்ளிரவில் குடிமனைகளிற்குள் உட்புகும் காட்டு யாணைகள் மக்களின்  வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதார பயிர்கள் என்பனவற்றை நாசம் செய்வதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாறு கடந்த இரு நாட்களாக ஒலுமடுக் கிராமசேவகர் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகளிற்குள் உட்புகுந்த யாணைகள் அவர்களின் வாழ்வாதார ஜீவனோபாயத் தொழிலான பப்பாசிகள் பழுத்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள சமயம் அவற்றினை நாசம் செய்துள்ளது.
இவ்வாறு இரு நாட்களும் மூன்று விவசாயிகளிற்கு சொந்தமான 300 வரையான பப்பாசி மரங்களை அழித்து நாசம் செய்துள்ளதுடன் இது தொடர்பில் அதிகாரிகள் போதிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது ,
குறித்த பகுதிகளில் யாணைகளின் தாக்கம் அதிகரித்தமையினால் யாணை வெடிகளை பயன்படுத்தினோம் இருப்பினும் அதற்கும் கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் காரணத்தினால் தற்போது பாதுகாப்பு வேலிகளை அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றோம்.
இதன் முதல் கட்டமாக இவ் வேலிகளிற்குரிய தூண்கள் அனைத்தும் தருவிக்கப்பட்டு விட்டன. இதன் அடுத்த கட்டப்பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும். இவ்வாறு ஆரம்பிக்கும் பணிகள் முதலில் ஒலுமடு , பழம்பாசி ஊடாகவே மேற்கொள்ளப்படவுள்ளது. என்றார்.

ad

ad