புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2016

இலங்கைத்தமிழர் விவகாரம் : ஓ.பி.எஸ். பதில்


சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் மீது இன்று 2வது நாளாக விவாதம் நடைபெற்றது.  அப்போது எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் ஆளுங்கட்சி உறுப்பினர்களூக்கு சவால் விடுத்தார்.

பிரபாகரனை கொன்றபோது திமுகதான் ஆட்சியில் இருந்தது என்று வெற்றிவேல் கூறினார்.  அதற்கு, பிரபாகரனை தூக்கிலிட வேண்டும் என்று கூறியவர் முதல்வர் ஜெயலலிதா.  இலங்கை தமிழர் விவகாரம்குறித்து முழுமையாய விவாதிக்க திமுக தயார் என்று துரைமுருகன் சவால் விடுத்தார்.

இதையடுத்து பேசிய நிதிமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ’’இலங்கை தமிழர் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காணவும், சம உரிமை பெறவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  நடவடிக்கை குறித்து விளக்கமாக ஆளூநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது’’ என அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்

ad

ad