புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூன், 2016

நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க அனைத்தும் தயார்- அரசாங்கம்

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை
தோற்கடிப்பதற்காக சகல நடவடிக்கைகளும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்கு பலத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடித்த பின்னர், கூட்டு எதிர்க்கட்சியை ஓய்வெடுக்க செய்ய முடியும் என உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியில் 51 நாடாளுமன்ற உறுப்பினர்களே இருப்பதாகவும் 51 பேரால் நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிக்கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட லக்ஷ்மன் கிரியெல்ல, வங்குரோத்து நிலையில் இருந்த நாட்டையே தற்போதைய அரசாங்கம் கடந்த ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி பொறுப்பேற்றது.
எனினும் அரசாங்கம் நாட்டை தற்போது வேகமாக முன்னேற்றி வருகிறது.
நாட்டை முன்னேற்றுவதற்காக ஜனாதிபதியும் பிரதமரும் பல்வேறு நாடுகளுக்கு சென்று, அந்த நாடுகளின் உதவிகளை பெற நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றார்.
அதேவளை தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்கும் வகையில் வாக்களிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியும் பிரதமரும் நேற்று முன்தினம் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எடுக்க வேண்டிய முடிவு குறித்து ஆலோசனை வழங்கியுள்ளனர்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதற்காக ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இன்று நாடாளுமன்றத்திற்கு வருகைத் தருமாறு ஆளும் கட்சியின் கொறடாவான அமைச்சர் கயந்த கருணாதிலக்க அறிவித்துள்ளார்.
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் அரசாங்கத்தின் பலத்தை காட்ட சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad