புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2016

த.மா.கா. விலகுவதை வரவேற்கிறோம்: திருமாவளவன்


தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைகளுக்கு பிறகு கட்சி நிர்வாகிகள் சிலர் செய்தியாளர்களிடம் பேசும்போது, மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது. எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலை தேமுதிக தனியாக சந்திக்கிறது என்றனர். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், ம.ந.கூட்டணியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திருமாவளவன், தேமுதிக, த.மா.கா. விலகுவதால் மக்கள் நலக் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மக்கள் பிரச்சனைக்காக மக்கள் நலக் கூட்டணி தொடர்ந்து போராடும். குரல் கொடுக்கும். தேமுதிக, த.மா.காங்கிரஸ் கட்சியும் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்திருந்தால், அந்தக் கூட்டணியில் ஒரு அங்கமாக ஐக்கியமாகியிருந்தால் நாங்கள் மொத்தத்தில் மக்கள் நலக் கூட்டணி என்று மட்டுமே அழைத்திருப்போம். எனவே தொகுதி உடன்பாடு மட்டுமே வைத்துக்கொண்ட த.மா.கா. இன்று சுதந்திரமாக முடிவு எடுத்து உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட இருக்கிறோம். அதற்கு ஏற்ற வகையில் கட்சியை வலுப்படுத்த திட்டமிட்டிருக்கிறோம் என்று அறிவித்திருப்பது அதிர்ச்சிக்குறியதோ, ஆச்சரியத்திற்குரியதோ அல்ல. அந்த முடிவு சுதந்திரமான முடிவு. அதனை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறது என்றார்.

ad

ad