புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூன், 2016

மஹிந்தவின் அனைத்து இராணுவப் பாதுகாப்பும் நீக்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அனைத்து இராணுவப் பாதுகாப்பும் நீக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் முதல் மஹிந்தவிற்கு வழங்கப்பட்டிருந்த முழு இராணுவப் பாதுகாப்பும் அகற்றிக்கொள்ளப்பட்டுள்ளது.
மஹிந்தவின் பாதுகாப்பிற்காக கடமையில் அமர்த்தப்பட்டிருந்த கேர்ணல் மகேந்திர பெர்னாண்டோ, நெருக்கமான பாதுகாப்பு உத்தியோகத்தரான மேஜர் நெவில் வன்னியாரச்சி உள்ளிட்ட ஐந்து உயர் இராணுவ அதிகாரிகள் மஹிந்தவின் பாதுகாப்பு பணிகளிலிருந்து வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதன்படி, மஹிந்தவிற்கு வழங்கப்பட்ட மொத்த இராணுவப் பாதுகாப்பும் நீக்கப்பட்டுள்ளது.
மஹிந்தவிற்கு பாதுகாப்பு வழங்கிய இராணுவ உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு கட்டங்களாக வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டனர்.
இறுதியாக ஐந்து உயர் இராணுவ அதிகாரிகள் மஹிந்தவின் ஜப்பான் விஜயம் நிறைவடையும் வரையில் வாபஸ்பெற்றுக்கொள்ளப்படவில்லை.
மஹிந்தவின் ஜப்பான் விஜயத்தைத் தொடர்ந்து இந்த உயர் இராணுவ அதிகாரிகளும் இராணுவத் தலைமையகத்திற்கு மீள அழைக்கப்பட்டுள்ளனர்.
மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டமை குறித்து கூட்டு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
எனினும், முக்கிய பிரபுக்கள் அனைவருக்கும் விசேட அதிரடிப்படையின் பயிற்றப்பட்ட உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ad

ad