புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூன், 2016

p36d.jpg
ஜெர்மனி  

கால்பந்து உலகக்கோப்பையை நான்கு முறையும், யூரோ கோப்பையை மூன்று முறையும் வென்றிருக்கும் ஜெர்மனியே இந்த முறையும்
கோப்பையை வெல்லும் அணியாக கணிப்பில் முதல் இடத்தில் இருக்கிறது. ஆனால் சோகம் என்னவென்றால், கடைசியாக யூரோ கோப்பையை ஜெர்மனி வென்று 20 வருடங்களாகிவிட்டது. இந்த முறை உலக சாம்பியன் என்ற கெத்துடன் யூரோ கோப்பைக்குள் நுழையும் ஜெர்மனி, கோப்பையை வென்றாக வேண்டும் என்ற வெறியில் இருக்கிறது.

ஜெர்மனியைப் பொறுத்தவரை, சூப்பர் ஸ்டார் என யாரும் கிடையாது. அனைத்து வீரர்களும் சூப்பர்ஸ்டார்ஸ்தான். கோல்கீப்பர் மேனுவல் நூயூவரைத் தாண்டி பந்து எல்லைக்கோட்டைக் கடப்பது கடினம் என்றால், முன்களத்தில் தாமஸ் முல்லர் எப்போது, எங்கு இருந்து வருவார் எனத் தெரியாது. மிக லாகவமாகக் கடந்து செல்லும் அசாத்திய திறமையும் வேகமும்தான் முல்லரின் பலம்.

2014-ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் வெற்றி கோல் அடித்து அர்ஜென்டினாவின் வெற்றியைப் பறித்த மரியோ கோட்சேவும் சாதாரண ஆள் இல்லை. மைதானத்தில் ஓடிக்கொண்டே இருப்பார் கோட்சே. நடுகளத்தில் அனுபவமிக்க பாஸ்டியன் ஸ்வான்ஸ்டேகர் ஜெர்மனியின் மிகப் பெரிய பலம். டோனி க்ருஸ், சமி கெடிரா, மெசூத் ஒசில் தாமஸ்எ முல்லர்ன  மனுவேல்  நோயர் ஜெர்மனியின் ஒவ்வொரு வீரரும் எதிர் அணியை மிரளவைப்பவர்கள்.
p36b.jpg
ஸ்பெயின் 

ஜெர்மனியைப் போலவே யூரோ கோப்பையை மூன்று முறை வென்றிருக்கும் அணி என்பதோடு, ஸ்பெயின்தான் யூரோ கோப்பையின் நடப்பு சாம்பியன். ஆனால், 2014-ம் ஆண்டு உலகக்கோப்பையில் ஸ்பெயின் மரண அடி வாங்கி முதல் சுற்றிலேயே வெளியேறியதால், ஸ்பெயினுக்கு இந்த முறை மனரீதியிலான சவால்களும் அதிகம். ஸ்பெயின், டிக்கி டாக்கா ஆட்டமுறையைப் பின்பற்றும்.

தங்களுக்குள் ஷாட் பாஸ் போட்டுக்கொண்டு, தங்கள் கட்டுப்பாட்டிலேயே பந்தை வைத்துக்கொண்டு, எதிர் அணி வீரர்களை சோர்வுக்குள்ளாக்கி தக்க சமயத்தில் கோல் அடிப்பது டிக்கி டாக்கா உத்தி. `ஒருகாலத்தில் ஸ்பெயினுக்கு டிக்கி டாக்கா, மந்திரம் போல பலித்தது. ஆனால், கடந்த உலகக்கோப்பையில் டிக்கி டாக்கா எடுபடவில்லை. அதனால் இந்த முறை புதிய ஆட்டமுறையில் ஸ்பெயின் ஆடும்' என்கிறார் அதன் பயிற்சியாளர்.

ஸ்பெயின் அணி, நட்சத்திர வீரர்கள் நிறைந்த அணி. ஐகெர் கெசிலாஸ் ஸ்பெயின் அணியின் அனுபவமிக்க கோல்கீப்பர். 2000-ம் ஆண்டு முதல் இதுவரை தொடர்ந்து ஐந்து யூரோ கோப்பைத் தொடரில் விளையாடியிருக்கிறார். நடுகளத்தில் ஆன்ட்ரஸ் இனியஸ்டா பிரித்து மேய்வார்; எதிர் முகாமில் இருந்து கோல் போஸ்ட்டுக்குப் பந்தைக் கடத்தி வருவதில் கில்லாடி. டேவிட் சில்வா, ஃபெப்ரிகாஸ் ஆகியோர் நடுகளத்தில் இனியஸ்டாவுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். தடுப்பாட்டத்தைப் பொறுத்தவரை செர்ஜியோ ரமோஸ் எப்போதுமே அதிரடிதான். ஒன்று பந்தைத் தூக்கு இல்லையென்றால், ஆளைத் தூக்குவதுதான் ரமோஸின் பாலிசி. நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்த்தை ஸ்பெயின் தக்கவைத்துக் கொண்டால், யூரோவை நான்கு முறை வென்ற சாதனையையும் படைக்கும்.
p36c.jpg
இங்கிலாந்து 

அது உலகக்கோப்பையாக இருந்தாலும் சரி, யூரோ கோப்பையாக இருந்தாலும் சரி ஒவ்வொரு முறையும் கப்பு எங்களுக்குத்தான் என ஓவர் சவுண்டோடு நுழையும் அணி இங்கிலாந்து. இந்த முறையும் அந்தப் பாரம்பர்யம் தொடர்கிறது.

இந்த முறை இங்கிலாந்து பயிற்சியாளர் ஹாட்ஸன், திறமைமிகுந்த இளம் அணியைத் தயார்செய்திருக்கிறார். கேரி காகில், கிறிஸ் ஸ்மால்லிங், ஆடம் லல்லென்னா, ரஹீம் ஸ்டெர்லிங், ஸ்டர்ரிஜ், ஜேமி வார்டி என இளம் வீரர்கள் பட்டாளம் எதிர் அணிக்கு நிச்சயம் கிலியை ஏற்படுத்தத்தான் செய்கிறது. இதில் ஜேமி வார்டி மிக முக்கியமானவர். இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் பெரிய அணிகள் எல்லாம் வெளியேற, லியோசெஸ்டர் சிட்டி என்ற கத்துக்குட்டி அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதற்கு முழுமுதற் காரணம் ஜேமி வார்டிதான். லியோசெஸ்டர் அணிக்காக 24 கோல்கள் அடித்து அந்த அணிக்குக் கோப்பை வென்று கொடுத்துள்ளார் ஜேமி. இங்கிலாந்து அணியின் கேப்டன் வேன் ரூனேவும் வேறு களத்தில் இருக்கிறார்.குழு நிலையில்  எதிர்பார்ப்பை பெரிதாக நிறைவேற்றவில்லை  வேல்சிடம்  சமப்படுததியது உட்பட  
p36e.jpg
இத்தாலி 

நான்கு முறை உலகக்கோப்பை சாம்பியன் அணியான இத்தாலிக்கு, இந்த யூரோ கப் மிகப் பெரிய சவால்தான். இத்தாலியின் முக்கிய வீரரும், `மிட்ஃபீல்ட் மேஸ்ட்ரோ' எனப் புகழப்படுபவருமான ஆண்ட்ரூ பிர்லோ இப்போது அணியில் இல்லை. கடந்த யூரோவில் கலக்கிய சேட்டைக்கார மரியோ பாலோட்டலியும் இந்த முறை அணியில் இல்லை. பலோட்டலிக்குப் பதிலாக ஸ்டீபன் எல்சார்வி என்கிற இளம் வீரர் முன்களத்தில் விளையாடப்போகிறார். இத்தாலி அணி எப்போதும் தடுப்பாட்டத்தை நம்பியே களம் இறங்கும். கடந்த உலகக்கோப்பையில் உருகுவே வீரர் சுவாரஸிடம் கடி வாங்கிய கெலினியை மையமாக வைத்ததுத்தான் இந்த முறை இத்தாலியின் தடுப்பாட்டம் இயங்கப்போகிறது. பானுச்சி, பர்சாக்லி ஆகியோரும் பின்களத்தில் இத்தாலிக்கு நம்பிக்கை கொடுப்பவர்கள்.

கேப்டன் ஜியான்லுகி பஃபன் உலகிலேயே மிகச் சிறந்த கோல்கீப்பர். இத்தாலி அணிக்காக 157 சர்வதேசப் போட்களில் விளையாடியுள்ளார். இவருக்கு இது 4-வது யூரோ தொடர். இத்தாலியைப் பொறுத்தவரை எடுத்தோம் கவிழ்த்தோம் என ஆடுவது இல்லை. எதிர் அணியைப் பொறுத்து தடுப்பாட்டத்தைக் கையாளும். தேவைப்பட்டால் தாக்குதல் ஆட்டத்தைத் தீவிரப்படுத்தும். இந்த யூரோவில், அனுபவமும் இளமையும் கலந்த ஒரு கலவையாக இத்தாலி இருக்கிறது.
p36f.jpg
போர்ச்சுகல் 

`போர்ச்சுகல்...' என்றதுமே நமக்கு ரொனால்டோதான் நினைவுக்கு வருவார். இந்த முறை ரியல்மாட்ரிட்டுடன் சேர்ந்து சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்ற தெம்பில் ரொனால்டோ இருக்கிறார். பந்து காலுக்குக் கிடைத்துவிட்டால், கோல் கம்பம்தான் இவரது இலக்காக இருக்கும். கவுன்டர் அட்டாக்கில் ரொனால் டோவைப் பிடிக்கவே முடியாது. அந்த அளவுக்கு ஒரு வேகம் இருக்கும். ஆனால், ரொனால்டோவைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், போர்ச்சுகல் என்ற அணியே காற்றுபோன பலூன்தான். ஒவ்வொரு முறையும் ரொனால்டோவை நம்பியே களம் இறங்குவதால் ஆரம்பத்திலேயே வெளியேறிவிடுகிறது போர்ச்சுகல்.குழு நிலை ஆட்டங்களில்  எல்லாம் சமநிலை ஆடினது பெரிதாக சோபிக்காத அணி  . அடுத்த சுற்றுக்கு  தகுதி பெற்றதே  மயிரிழையில் தான் 

ad

ad