புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூன், 2016

கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து சட்டசபையில் இன்று ஜெயலலிதா உரையாற்றுகிறார்

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை)
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உரையாற்றுகிறார்.
தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கடந்த 16-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. மறுநாள், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை தொடர்ந்து, 20-ந் தேதி முதல் நேற்று வரை 3 நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள்.
நேற்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட உறுப்பினர்கள் பேசினார்கள். இந்த நிலையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று (வியாழக் கிழமை) பேசுகிறார்.
ஏற்கனவே, தமிழக சட்டசபை கூட்டம் கடும் விவாதங்களுடன் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இன்றைய பதில் உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பதில் உரையை தொடர்ந்து, சட்டசபை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது.
அடுத்த சில வாரங்களில் 2016-2017-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டமும், தொடர்ந்து மானியக் கோரிக்கை மீதான விவாதம், வாக்கெடுப்பும் நடைபெறும். இந்தக் கூட்டம் சுமார் ஒரு மாதம் வரை நடக்கும்.

ad

ad