புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூன், 2016

கொத்தணிக்குண்டு இராணுவத்தினருடையது என்பதை நிரூபிக்கமுடியுமா?- அரசாங்கம் கேள்வி

இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்தினர் எக்காரணத்தைக்கொண்டும் கொத்தணிக் குண்டுகளை பயன்படுத்தவில்லை
என்பது எமக்குத் தெரியும். ஜெனிவா கூட்டத்தொடர் இடம்பெற்று வருகின்ற நிலையில் இவ்வாறு கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக கூறி எம்மை அசௌகரியப்படுத்த முயற்சிக்கப்படுகின்றது என்று அரசாங்கம் கூறியுள்ளது.
சர்வதேச ஊடகம் வெளியிட்டுள்ள புகைப்படங்களை உண்மையென நம்ப முடியாது. ஏழு வருடங்கள் கடந்து ஏன் இவ்வாறு புகைப்படங்களை வெளியிடவேண்டும் என்றும் அரசாங்கம் கேள்வியெழுப்பியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் ராஜித்த சேனாரட்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்
கேள்வி - இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. சர்வசேத ஊடகமொன்று இது தொடர்பான புகைப்படங்களையும் வெ ளியிட்டுள்ளது. இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன ?
பதில் - இந்தப் புகைப்படங்கள் இலங்கையிலிருந்து எடுக்கப்பட்டது என்பதை எவ்வாறு உறுதிப்படுத்தப் போகிறார்கள். அது மட்டுமன்றி இது இலங்கை இராணுவத்தினுடைய கொத்தணிக் குண்டுகள் என எவ்வாறு கூற முடியும்.இது தொடர்பில் முதலில் ஆராய வேண்டும்.
அது மட்டுமன்றி இந்த புகைப்படங்கள் இருக்கும். கொத்தணிக் குண்டுகள் இராணுவத்துடையதா அல்லது புலிகளுடையாதா என யாருக்குத் தெரியும்.மேலும் யுத்தம் முடிவடைந்து 7 வருடங்கள் கடந்த பின்னர் தற்போது ஏன் இவற்றை வெளியிட வேண்டும். ஜெனிவா கூட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் அரசாங்கத்தை அசௌகரியப்படுத்த இவ்வாறு செய்யலாம் அல்லவா ? எமது இராணுவத்தினர் கொத்தணிக் குண்டுகளை பயன்படுத்தியவர்கள் அல்ல என்றார்.
பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன இதன்போது கருத்து தெரிவிக்கையில்,
எமது இராணுவத்தினர் கொத்தணிக் குண்டுகளை பயன்படுத்தவில்லை. இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் உண்மையானவை என்று கூற முடியாது.
அத்துடன் கண்ணிவெடி அகற்றும்போது அது தொடர்பான தகவல்களையோ புகைப்படங்களையோ வெளியிட முடியாது. அவ்வாறு செய்யக்கூடாது. கண்ணிவெடி அகற்றல் என்பது ஒரு துறைசார் துறையாகும். அதில் அவ்வாறு செய்ய முடியாது.
எவ்வாறெனினும் எமது இராணுவத்தினர் கொத்தணி குண்டுகளை பயன்படுத்தவில்லை என்றார்.

ad

ad