புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூன், 2016

முல்லைத்தீவுக்கு நகர்கிறது ஆயுதக் களஞ்சியம்? – வடக்கு நோக்கி நகர்த்தப்படும் வெடிபொருட்கள்

சலாவ சிறிலங்கா இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தை அடுத்து, சிறிலங்கா படையினரின் வெடிபொருள் களஞ்சியங்களை
தென்பகுதியில் இருந்து வடக்கு நோக்கி நகர்த்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அனுராதபுர மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் புதிய வெடிபொருள் களஞ்சியங்களை அமைக்க சிறிலங்கா இராணுவம் திட்டமிட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சன அடர்த்திமிக்க பகுதியில் அமைந்திருப்பதால், வியாங்கொட மத்திய ஆயுதக் களஞ்சியத்தையும் அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும், வெடிபொருட்களைப் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்துவது எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது.
வெலிசறை, சலாவ, வியாங்கொட ஆயுதக் களஞ்சியங்கள் மாத்திரம் பாதுகாப்பானவை என்று கருதப்பட்டன.
எனினும் சலாவ ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியதால், ஏனையவற்றின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
போர் நடந்த காலத்தில் கொழும்பு துறைமுகத்தின் பண்டாரநாயக்க இறங்குமுறையில்,  வெடிபொருள் கிடங்கு ஒன்று பராமரிக்கப்பட்டு வந்தது.
எனினும், தற்போது வெலி்சறையில் உள்ள ஆயுதக் கிடங்கில் எல்லா வெடிபொருட்களையும் களஞ்சியப்படுத்த முடியாது.
இதனால், அனுராதபுரம் மற்றும் முல்லைத்தீவில் புதிய ஆயுதக் களஞ்சியங்களை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ad

ad