புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூன், 2016

நல்லிணக்கம் ,பொறுப்புக்கூறல் என்ற விடயங்களுக்கும் தமது நாடு ஆதரவளிக்கும்சூழ்நிலை மேம்படும்போது தமது நாட்டின் தனியார்துறையினர் முதலீடுகளை மேற்கொள்ள முன்வருவர்..சுவிட்ஸர்லாந்து

இலங்கையில் அரசியல் அமைப்பு உருவாக்கம் குறித்து இன்று சுவிட்ஸர்லாந்து தூதுவர் ஹெய்ன்ஸ் வோக்கர் நெடெர்கோன்ர்ன்
(Heinz Walker Nederkoorn) வடக்கு மாகாண ஆளுநருடன் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது.
இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், இனப்பிரச்சினைக்கான நீண்டகால தீர்வு, அதிகாரப்பரவலாக்கம் உட்பட்ட பல விடயங்கள் குறித்து பேசியதாக குறிப்பிட்டார்.
அண்மையில் வெளியான அரசியல் அமைப்பு உருவாக்க அறிக்கையில் நல்லவிடயங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நல்லிணக்கம் என்பது முக்கியமான விடயம். அத்துடன் பொறுப்புக்கூறல் என்ற விடயங்களுக்கும் தமது நாடு ஆதரவளிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
போரின் வடுக்களை ஆற்றுவதற்கு நீண்டகால எடுக்கும். இந்தநிலையில் தற்போது இடம்பெறுகின்ற நடவடிக்கைகள் எதிர்கால சந்ததிகளின் நன்மைக்காகவே செய்யப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்
இதேவேளை இலங்கையில் சூழ்நிலை மேம்படும்போது தமது நாட்டின் தனியார்துறையினர் முதலீடுகளை மேற்கொள்ள முன்வருவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ad

ad