புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2016

ஃபிஃபா தலைமை அலுவலகத்தில் சோதனை

ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் உள்ள சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (ஃபிஃபா) தலைமை அலுவலகத்தில் ஸ்விட்சர்லாந்து விசாரணை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
 ஃபிஃபா துணை பொதுச் செயலர் பதவியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட மார்கஸ் கேட்னரை குறிவைத்தே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. 
 இது தொடர்பாக ஃபிஃபா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஃபிஃபா கிரிமினல் வழக்கின் ஒரு பகுதியாக அட்டர்னி ஜெனரல் அலுவலக (ஓஏஜி) அதிகாரிகள் ஃபிபா தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தினர். ஏற்கெனவே அவர்கள் கண்டறிந்த விஷயங்களை உறுதி செய்வதற்காகவும், அது தொடர்பான மேலும் விவரங்களை சேகரிப்பதற்காகவும் இந்த சோதனையை நடத்தினர். அப்போது சில முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னணு தகவல்களை எடுத்துச் சென்றனர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இது தொடர்பான விவரங்கள் எதையும் ஓஏஜி தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில் ஃபிஃபா செய்தித் தொடர்பாளர் டெலியா பிஷர் கூறுகையில், "கேட்னரின் அலுவலகத்தில்தான் சோதனை நடத்தப்பட்டது' என்றார். ஃபிஃபா தலைமை அலுவலகத்தில் சோதனை

ad

ad