புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூன், 2016

ஹிந்தவின் முக்கிய உறுப்பினர்கள் அரசுடன் இணைவு?

னாதிபதிக்கு ஆதரவான, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள் வெகுவிரைவில் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவுள்ளதாக அமைச்சர் சரத் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெளிவுபடுத்துகையில் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

‘ஒன்றிணைந்த எதிர்க்கட்சி சார்பாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு 51 வாக்குகளே கிடைத்தன. அதில் ஜே.வி.பியினர் ஐவரும் அடங்குகின்றனர். எனவே அவர்களது எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.

எவ்வாறாயினும் இதனால் சில பிரதிபலன்களும் உள்ளன. இன்னும் ஒரிரு நாட்களில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியிலிருந்து சிலர் எம்முடன் இணைவதற்கு தீர்மானித்துள்ளனர். அவ்வாறு இணையவுள்ளவர்களின் பெயர்களை இங்கு குறிப்பிட விரும்பவில்லை. எனினும் இந்த தகவல்கள் இன்னும் சில தினங்களில் அம்பலமாகும்.

இவர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தபோதிலும், அன்றைய வாக்கெடுப்பின்போது ஒன்றிணைந்த எதிர்க்கட்சி சார்பில் பலர் சமூகமளித்திருக்கவில்லை. ஏன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், கம்மியூனிஸக் கட்சியின் பிரதிநிதிகளும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.’ என்றும் கூறினார்.

ad

ad