புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூன், 2016

இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய பசில் , கோட்டா மீதும் விசாரணை-மக்ஸ்வெல் பரணகம கோரிக்கை

அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் தொடர்பிலான பணியகம், இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய பசில் ராஜபக்ச, கோட்டாபய, சவேந்திர சில்வா போன்ற இரண்டாம் தரப்பினரையும் விசாரணை செய்ய வேண்டும் என்று மெக்ஸ்வல் பரணகம கோரிக்கை விடுத்தார்.

காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை மட்டுமே தமது ஆணைக்குழு விசாரணை செய்தது. எனினும் அவர்களால் குற்றம்சாட்டப்பட்ட பாதுகாப்பு தரப்பினரை விசாரணை செய்வதற்கான கால அவகாசம் தங்களுக்கு இருக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
எனவே இந்த விவகாரத்தில் தீர்வொன்றை பெற வேண்டுமாயின் காணாமல் போனோர் தரப்பினரைப்போன்று, பாதுகாப்பு தரப்பினரையும் விசாரணை செய்ய வேண்டிய முக்கிய பங்கு, அரசாங்கத்தினால் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ள பணியகத்திற்கு உள்ளது என்று பரணகம கூறினார்.
 
அவர் இதுதொடர்பில் மேலும் கூறுகையில்,
 
காணாமல்போனோர் ஆணைக்குழுவின் ஆயுட்காலம் மேலும் அதிகரிக்கப்பட்டிருந்தால் இராணுவச் சிப்பாய்களையும் அழைத்து விசாரணை செய்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.   
 
இராணுவச் சிப்பாய்களையும் அழைத்து ஏன் விசாரணை செய்யவில்லை என்று சிலர் கேள்வி எழுப்பலாம். மொத்தமாக கிட்டத்தட்ட 19 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவாகின. அப்படியானால் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பிலும்  இராணுவம் சார்பிலும் எத்தனை பேரை விசாரணைக்கு அழைப்பது? அவர்களை 19 ஆயிரம் தடவை அழைப்பதா? என்ற நெருக்கடி எழும்.
 
எனவேதான் முறைப்பாட்டாளர்களின் முறையீடுகளை விசாரணை செய்ததன் பிற்பாடு அந்த சாட்சியங்களின்படி பட்டியல் ஒன்றை தயாரித்து சம்பந்தப்பட்ட தரப்பினரை சாட்சியத்திற்கு அழைப்பு விடுக்கவே தீர்மானித்திருந்தோம்.
 
அவர்களை பலமுறை விசாரணைக்கு அழைக்கவும் முடியாது, அவர்களைத் தேடுவதும் சிரமம் என்பதோடு பலர் ஓய்வுபெற்றிருப்பார்கள். இப்படிப்பட்ட சிக்கல்நிலை காணப்படுகிறது.
 
இந்த இரண்டாம் தரப்பினர் மீதான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை எமது இறுதி இடைக்கால அறிக்கையில் பரிந்துரைப்போம்.
 
இந்த ஆணைக்குழு தொடர்ந்து இருக்குமானால் அவர்களையும் அழைத்து விசாரணை செய்வோம். இறுதிகட்ட யுத்தம் தொடர்பான இடைக்கால அறிக்கையை தயாரித்தபோது வன்னி இறுதிப்போரில் பங்கேற்ற இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் சிலரை அழைத்து விசாரணை செய்திருந்தோம்.
 
இந்த விசாரணை என்பது இரண்டாவது இடைக்கால அறிக்கைக்கு ஏதுவான காரணங்களை உள்ளடக்கவே தவிர, காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகளுக்காக அல்ல.
   
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தமது விசாரணைக்கு இவரை அழைத்திருந்தபோதிலும் நாங்கள் அவரை அழைத்திருக்கவில்லை. எனினும் முறைப்பாட்டாளர்களின் விசாரணைகள் நிறைவுற்ற பின்னரே அவரை அழைக்க உத்தேசித்திருந்தோம். – என்றார்.இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய பசில் , கோட்டா மீதும் விசாரணை-மக்ஸ்வெல் பரணகம கோரிக்கை

ad

ad