புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூன், 2016

ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறியது பிரித்தானியா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வாக்கெடுப்பு- இறுதி முடிவுகள்
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா 17,410,742 பேர் வெளியேறவும், 16,141,241 பேர் இணைந்திருக்கவும் வாக்களித்துள்ளனர்
NATIONLEAVEREMAIN
England15,188,40613,266,996
Northern Ireland349,442440,437
Scotland1,018,3221,661,191
Wales854,572772,347
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தும்வேல்ஸும் பிரியவேண்டு ம்ம்வ என்றும்ட ஸ்கொட்அலாந்தும்யவடஐர்லாந்தும் சேர்ந்திருக்கவேண்டும்என்றும் வாக்களித்துள்ளன

ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் தங்கள் சமூக, பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ‘ஐரோப்பிய யூனியன்’ என்ற கூட்டமைப்பை கடந்த 1993ம் ஆண்டு உருவாக்கின.
இதில் பிரான்ஸ், ஜேர்மனி, பெல்ஜியம், பிரிட்டன், இத்தாலி, டென்மார்க், போர்ச்சுக்கல் உள்ளிட்ட 28 நாடுகள் இடம்பெற்று உள்ளன.
இதில் உள்ள நாடுகள் தங்கள் நாட்டின் எல்லைகளை பிற உறுப்பு நாடுகளுக்கு திறந்து வைத்துள்ளன. இந்த அமைப்பின் கடைசி உறுப்பு நாடாக 1-7-2013 அன்று குரோசியா சேர்க்கப்பட்டது.
ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளில் வசிப்பவர்கள் அந்த அமைப்பில் உள்ள எந்தவொரு நாட்டுக்கும் சென்று வாழலாம், வேலைவாய்ப்புகளை பெறலாம், கல்வி கற்கலாம், தொழில் தொடங்கலாம்.
இதன் காரணமாக ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனில் அதிக அளவில் குடியேற தொடங்கினார்கள்.

ad

ad